ஏமாற்றமா இருக்கு, அந்த ஒரு விஷயத்துல வெ.இ பாடம் எடுத்துட்டாங்க – வரலாற்றுத் தோல்விக்கு பின் டிராவிட் கவலையுடன் பேசியது என்ன?

- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக நடைபெற்று முடிந்த 5 போட்டியில் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் 3 – 2 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்த இந்தியா ஏமாற்றத்துடன் நாடு திரும்பியுள்ளது. 2024 டி20 உலகக் கோப்பைக்கு தேவையான இளம் வீரர்களை கண்டறியும் நோக்கத்தில் ரோகித் சர்மா போன்ற சீனியர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டு ஹர்திக் பாண்டியா தலைமையில் இளம் வீரர்களுடன் இத்தொடரில் களமிறங்கிய இந்தியா முதலிரண்டு போட்டிகளில் தோற்றாலும் அதற்கடுத்த 2 போட்டிகளில் வென்று தொடரை சமன் செய்தது. ஆனால் வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசிப் போட்டியில் தோற்ற இந்தியா 2016க்குப்பின் முதல் முறையாக வெஸ்ட் இண்டீஸிடம் ஒரு டி20 தொடரில் தோல்வியை சந்தித்துள்ளது.

மேலும் தற்சமயத்தில் தரவரிசையில் நம்பர் ஒன் அணியாக இருக்கும் இந்தியா வரலாற்றில் முதல் முறையாக 5 போட்டிகள் கொண்ட ஒரு டி20 தொடரில் தோல்வியை சந்தித்தது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. இத்தனைக்கும் ஐபிஎல் 2023 தொடரில் சிறப்பாக செயல்பட்டு நல்ல ஃபார்மில் இருக்கும் வீரர்களுடன் களமிறங்கிய இந்தியாவின் பவுலிங் ஓரளவு சிறப்பாக இருந்தும் பேட்டிங்கில் திலக் வர்மா, சூரியகுமார் ஆகியோரை தவிர்த்து எஞ்சிய முக்கிய பேட்ஸ்மேன்கள் சொதப்பியது தோல்வியை கொடுத்தது.

- Advertisement -

ட்ராவிட் கவலை:
அத்துடன் அக்சர் பட்டேல், சஹால் போன்ற ஸ்பின்னர்களை சரியாக பயன்படுத்தாத பாண்டியாவின் கேப்டன்ஷிப்பும் தோல்விக்கு காரணமானது. முன்னதாக இந்த தொடரின் 2வது போட்டியில் 9, 10வது இடத்தில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் வீரர் அகில் ஹொசைன், அல்சாரி ஜோசப் போன்றவர்கள் முக்கிய ரன்களை அடித்து வெற்றி பெற வைத்த நிலையில் இத்தொடர் முழுவதுமே இந்திய பேட்டிங் வரிசையில் 8, 9, 10 போன்ற இடங்களில் களமிறங்கிய வீரர்கள் வெற்றியில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய முக்கிய ரன்களை எடுக்கவில்லை.

அப்படி டி20 கிரிக்கெட்டில் வெற்றியில் வித்தியாசத்தை ஏற்படுத்தக்கூடிய ரன்களை எடுக்கும் அளவுக்கு இந்திய லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் இல்லை என பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கவலை தெரிவித்துள்ளார். அதாவது 11வது பேட்ஸ்மனாக வரும் அல்சாரி ஜோசப் கூட அதிரடியான சிக்சர் அடிக்கும் திறமை கொண்டிருப்பதாக தெரிவிக்கும் அவர் இந்த விஷயத்தில் வெஸ்ட் இண்டீஸ் தங்களுக்கு பாடம் எடுத்துள்ளதாக கூறியுள்ளார். இது பற்றி போட்டியின் முடிவில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“இந்த தொடரில் எங்களிடம் இருந்த அணி நாங்கள் விரும்பிய சில வளைவு தன்மைக்கேற்றார் போல் கலவையை உருவாக்குவதற்கான மாற்றத்தை செய்ய அனுமதிக்கவில்லை. எனவே முன்னோக்கி செல்லும் போது இன்னும் சில விஷயங்களை நாங்கள் முன்னேற வேண்டிய இடங்கள் இருக்கிறது. குறிப்பாக பேட்டிங் வரிசையில் ஆழத்தில் முன்னேற்றம் காண்பதை பற்றி நாங்கள் முடிவெடுக்க வேண்டும். அதை சரி செய்ய நாங்களும் சில முயற்சிகளை எடுத்து வருகிறோம்”

“குறிப்பாக பேட்டிங் வரிசையில் ஆழத்தை ஏற்படுத்துவதற்காக எந்தளவுக்கு நம்மால் பந்து வீச்சை பலவீனப்படுத்த முடியும் என்று பார்த்தோம். ஏனெனில் டி20 கிரிக்கெட்டில் ஸ்கோர்கள் என்பது எப்போதும் பெரிதாகிக் கொண்டே செல்கிறது. எடுத்துக்காட்டாக நீங்கள் வெஸ்ட் இண்டீஸ் அணியை பார்க்கும் போது 11வது இடத்தில் வரும் அல்சாரி ஜோசப் சிக்சர் அடிக்கும் திறமையை கொண்டுள்ளார். அதே போல உங்களுடைய பேட்டிங் வரிசையில் நல்ல ஆழம் அவசியமாகும். எனவே அது போன்ற மிகப்பெரிய சவால்கள் எங்களுக்கு முன்னே சமாளிக்க காத்திருக்கின்றன”

இதையும் படிங்க:உலக கோப்பைக்கு தேர்வாகாத டீம்’கிட்ட தோத்துட்டீங்களே, ரொம்ப வலிக்குது – இந்தியாவை ஓப்பனாக தாக்கியதாக முன்னாள் வீரர்

“அது இந்த தொடரில் எங்களிடம் இருக்கும் குறையை காட்டியது. அதில் நாங்களும் புதிய பாதையை உருவாக்க வேண்டியுள்ளது. ஒவ்வொரு தொடரில் நாம் வெல்லும் முனைப்புடன் களமிறங்குவோம். ஆனால் இந்த தொடரில் நாம் வெல்ல முடியவில்லை என்பது ஏமாற்றமாகும். ஆனாலும் சில இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்து புதிய கலவை உருவாக்குவது பற்றி நாங்கள் சோதனை செய்தோம். அந்த வகையில் எங்களுக்கு சில நேர்மறையான முடிவுகள் கிடைத்ததால் அதை சிறப்பான வருங்காலத்தை கட்டமைக்க முன்னோக்கி எடுத்துச் சொல்ல இருக்கிறோம்” என்று கூறினார்.

Advertisement