நான் நேரில் வரவில்லை என்றாலும் என் உதவி உங்களுக்கு கிடைக்கும். சென்னை நண்பரை நெகிழ்வைத்த ராகுல் – விவரம் இதோ

Rahul
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் சமீபத்தில் நடந்து முடிந்தது. இந்த தொடரில் இந்திய அணி 2 – 1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்திய அணியின் கேப்டன் கோலி தொடர்நாயகன் விருதையும் பெற்றார். இந்த தொடரின் இரண்டாவது ஒருநாள் போட்டியில் ராகுல் பேட்டிங்கில் 80 ரன்கள் குவித்தது மட்டுமின்றி கீப்பிங்கிலும் சிறப்பாக செயல்பட்டதால் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

Rahul-1

- Advertisement -

அப்படி தான் ஆட்டநாயகனாக வென்ற பரிசுத் தொகையை அவர் சென்னை விலங்குகள் மருந்தகதிற்கு வழங்கியுள்ளார். மேலும் தனக்கு கிடைத்த அந்த ஒரு லட்ச ரூபாயுடன் சேர்த்து மேலும் கூடுதலாக ஒரு லட்சத்தை சேர்த்து இரண்டு லட்சமாக சென்னை பெசன்ட் நகரில் உள்ள விலங்குகள் சிகிச்சை மையத்திற்கு உதவியாக அளித்துள்ளார். இதுகுறித்து விலங்கு உரிமை ஆர்வலரும், ராகுலின் நண்பருமான ஷ்ரவன் கிருஷ்ணன் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் இந்த தகவலை பதிவிட்டுள்ளார்.

இரண்டு வாரத்திற்கு முன் ஷ்ரவன் கிருஷ்ணன் தனது நண்பரான கேஎல் ராகுலிடம் பேசியுள்ளார். அப்போது விலங்குகள் நலனுக்காக பணம் உதவி செய்வதாக ராகுல் அவரிடம் உறுதி அளித்ததாக தெரிகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-ஆவது ஒரு நாள் போட்டியில் ஆட்டநாயகன் விருதைப் பெற்ற நிலையில் தான் உறுதியளித்தபடி பணத்தை ராகுல் அனுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : ராகுல் ஆட்டநாயகன் விருதை வென்ற உடனே அவர் பணத்தை அனுப்புவார் என்று எனக்கு தெரியும்.

Rahul

ஆனால் இதில் ஆச்சரியப்படும் விஷயம் என்னவென்றால் அவர் வென்றதை விட இரு மடங்கு தொகையை அவர் மொத்தமாக இரண்டு லட்ச ரூபாயாக அனுப்பியுள்ளார். ராகுலும் நான் எப்போதும் தொடர்பில் உள்ளோம். காயமடைந்த விலங்குகளின் புகைப்படத்தை நான் பதிவிட்டால் கூட அவர் அதை பார்ப்பதற்கு கடினமாக இருக்கிறது என்று என்னிடம் கூறுவார்.

Rahul

மேலும் தன்னால் நேராக அங்கு வர முடியவில்லை என்றாலும் எனது உதவி உங்களுக்கு இருக்கும் என்று அவர் கூறியதாக தெரிவித்துள்ளார். மேலும் ராகுலும் நானும் அண்டர் 17 மாநில கிரிக்கெட் நாட்களிலிருந்து 12 ஆண்டுகளுக்கு மேலாக நண்பர்களாக இருக்கிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement