இரண்டு போட்டி. 8 ஓவர். ஒரு பவுண்டரி கூட கொடுக்காமல் அசத்தலாக பந்துவீசிவரும் – இந்திய இளம்வீரர்

pbks
Advertisement

நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இந்திய அணியில் தற்போது விளையாடி வரும் சில பவுலர்கள் சொதப்பி வருவதையும் ஏற்கனவே அணியில் இருந்து கழற்றி விடப்பட்ட வீரர்கள் சிறப்பாக விளையாடி வருவதை நாம் பார்த்து வருகிறோம். இதன் காரணமாக மீண்டும் இந்திய அணியின் தேர்வில் பல்வேறு குழப்பங்கள் ஏற்படும் என்று தெரிகிறது. ஏனெனில் தற்போது வரை இந்திய அணியில் இடம் பிடித்து இருக்கும் பவுலர்களான பும்ரா, ஆவேஷ் கான், ஷர்துல் தாகூர் போன்ற வீரர்கள் ரன்களை வாரி வழங்கியும், விக்கெட் எடுக்காமலும் விளையாடி வருகின்றனர்.

chahar 1

ஆனால் இந்திய அணியால் சமீபத்தில் ஓரங்கட்டப்பட்டு வரும் உமேஷ் யாதவ், சாஹல், குல்தீப் யாதவ் போன்ற வீரர்கள் சிறப்பாக பந்துவீசி விக்கெட் வீழ்த்தி மேட்ச் வின்னர்களாக திகழ்ந்து வருகிறார்கள். இதன் காரணமாக இந்தாண்டு இறுதியில் துவங்கும் டி20 உலக கோப்பை தொடரில் எந்தெந்த வீரர்களை தேர்வு செய்வது என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது எனக் கூறலாம். ஏனெனில் சிறப்பாக விளையாடுவார்கள் என்று இந்திய அணி ஆதரிக்கும் சில வீரர்கள் மோசமான பந்து வீச்சை வெளிப்படுத்துகிறார்கள்.

- Advertisement -

அதே வேளையில் இவர்கள் அணிக்கு தேவையில்லை என்று ஒதுக்கப்படும் பவுலர்கள் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்துகிறார்கள். இதன் காரணமாக தற்போது ஒரு குழப்பமான சூழ்நிலை நிலவுகிறது என்று கூறலாம். அந்த வகையில் கடந்த ஆண்டு டி20 உலக கோப்பை அணியில் இடம் பிடித்திருந்த ராகுல் சாகர் ஒரு சில போட்டிகளில் மட்டுமே விளையாடி அவரது மோசமான பந்து வீச்சு காரணமாக அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார்.

chahar

ஆனால் தற்போது அவர் தனது விடா முயற்சி காரணமாக மீண்டும் மும்பை அணியில் இருந்து வெளியேறி தற்போது பஞ்சாப் அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். கடந்த சீசன்களில் மும்பை அணிக்காக மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி அசத்தி இருந்த அவர் இந்த ஆண்டு அந்த அணியால் தக்க வைக்கப்படாமல் தற்போது பஞ்சாப் அணிக்காக விளையாடி வருகிறார். அவரின் திறமையை அறிந்த நிர்வாகம் அவருக்கு தொடர்ச்சியாக வாய்ப்புகளை வழங்கி வருகிறது.

- Advertisement -

அந்த வகையில் பெங்களூரு அணிக்கு எதிரான முதல் போட்டியில் அற்புதமாக பந்து வீசிய அவர் 4 ஓவர்கள் வீசி 22 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தி அசத்தினார். அதனை தொடர்ந்து நேற்று கொல்கத்தா அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் கூட பல்வேறு அதிரடி வீரர்களுக்கு எதிராக பந்து வீசிய அவர் தனது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி அனைவரையும் திணறடித்தார் என்றே கூறலாம். ஏனெனில் 4 ஓவர்கள் வீசிய அவர் 13 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியிருந்தார்.

இதையும் படிங்க : மற்ற அணிகளில் இது கிடைக்காது. ஆனால் சி.எஸ்.கே டீமில் இந்த சலுகையெல்லாம் உண்டு – ஹர்பஜன் புகழ்ச்சி

அதோடு மட்டுமின்றி அவரது ஸ்பெஷல் யாதெனில் இந்த இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ள அவர் முழுவதுமாக 8 ஓவர்கள் வீசியுள்ளார். அந்த எட்டு ஓவரில் ஒரு பவுண்டரி கூட அவர் விட்டு கொடுக்கவில்லை என்பது சிறப்பு அம்சம். அதுமட்டுமன்றி கொல்கத்தா அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் தான் வீசிய முதல் ஓவரை மெய்டனாக வீசிய அவர் அதே ஓவரில் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தது கூடுதல் சிறப்பம்சம். இப்படி சிறப்பாக பந்துவீசி வரும் அவர் நிச்சயம் இந்திய அணியின் டி20 உலக கோப்பை அணிக்கு தேர்வு செய்யப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

Advertisement