மற்ற அணிகளில் இது கிடைக்காது. ஆனால் சி.எஸ்.கே டீமில் இந்த சலுகையெல்லாம் உண்டு – ஹர்பஜன் புகழ்ச்சி

Harbhajan
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் ஐபிஎல் தொடரில் பல்வேறு அணிக்காக விளையாடியுள்ளார். அதுமட்டுமின்றி ஒருசில அணிகளுக்கும் கேப்டனாகவும் திகழ்ந்துள்ளார். ஆனால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அவர் சென்னை அணிக்காக விளையாடிய அனுபவத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். நடப்பு பதினைந்தாவது ஐபிஎல் தொடரின் லீக் சுற்றுப் போட்டிகள் கடந்த 26-ஆம் தேதி துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Harbhajan

போட்டிகள் ஒருபக்கம் இப்படி சுவாரசியமாக சென்று கொண்டிருந்தாலும் மறுபக்கம் இந்த ஐபிஎல் தொடரில் விளையாடி உள்ள முன்னாள் வீரர்கள் பலரும் ஐபிஎல் தொடரில் விளையாடியது குறித்த சுவாரசியமான மற்றும் மனதிற்கு நெருக்கமான தகவல்களை பகிர்ந்து கொண்டு வருகின்றனர். அந்த வகையில் முன்னாள் சென்னை வீரர் ஹர்பஜன் சிங் சென்னை அணி குறித்து சுவாரசியமான தகவல் ஒன்றை பகிர்ந்து கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

- Advertisement -

நான் சிஎஸ்கே அணியில் சேர்ந்த போது ஒரு புதிய கலாச்சாரத்தை பார்த்தேன். அந்த அணியால் ஏலம் எடுக்கப்படும் அனைத்து வீரர்களின் குடும்பத்திற்கும் டிக்கெட்டுகள், பயணம், தங்குமிடம், உணவு உட்பட அனைத்து செலவையுமே அணி நிர்வாகம் ஏற்றுக் கொள்ளும். ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர் மட்டுமல்லாமல் அவர்களது குடும்பத்தில் இருந்து 10 பேர் வந்தால் கூட அந்த செலவு முழுவதையும் சிஎஸ்கே ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கும். அந்த அளவிற்கு சிஎஸ்கே சலுகைகளை வழங்கும்.

csk

ஆனால் இதனை மற்ற அணிகள் செய்ததில்லை. ஏனெனில் மற்ற அணிகளில் வீரர்களுடன் அவர்களது மனைவியோ அல்லது உறவினர்களோ வந்தால் அந்த கட்டணத்தை வீரர்கள்தான் செலுத்த வேண்டும். அது மட்டுமின்றி ஹோட்டல் அறை, உணவு உட்பட அனைத்து செலவையும் அந்த வீரரின் சம்பளத்திலிருந்து பிடித்துக் கொள்வார்கள்.

- Advertisement -

ஆனால் சென்னை அணியில் அப்படி கிடையாது. ஒரு வீரர் வெளிநாட்டிலிருந்து வர வேண்டும் என்றாலும் அவர்களுக்கான டிக்கெட்டை சென்னை அணியை முன்கூட்டியே புக் செய்யும். அது மட்டுமின்றி அவருக்கு, அவருடைய குடும்பத்திற்கு என அனைவருக்கும் சரியான ஏற்பாடுகளை செய்து அந்த செலவுகள் மொத்தத்தையும் சிஎஸ்கே நிர்வாகமே கவனித்துக் கொள்ளும்.

இதையும் படிங்க : பாகிஸ்தானில் பேமஸ் ஐபிஎல் டீம் இதுதான், இந்த வருடம் முதல் முறையாக கப் அடிக்க போவதை பாருங்க – சோயப் அக்தர்

அந்த வகையில் நான் சென்னை அணிக்காக விளையாடிய போது 7-8 குடும்பங்கள் இருந்தோம். இதனால் நிறைய குழந்தைகளும் இருந்தனர். அப்போது ஐபிஎல் தொடர் நடைபெறுவது போன்று இல்லாமல் ஒரு பிக்னிக் வந்தது போல இருக்கும். சென்னை அணியில் உள்ள சூழல் மிகவும் சிறப்பான ஒன்று. சென்னை அணியில் விளையாடியது மிகவும் மகிழ்ச்சி என்று ஹர்பஜன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement