பாகிஸ்தானில் பேமஸ் ஐபிஎல் டீம் இதுதான், இந்த வருடம் முதல் முறையாக கப் அடிக்க போவதை பாருங்க – சோயப் அக்தர்

Shoaib Akhtar
- Advertisement -

உலகின் மிகப்பெரிய டி20 கிரிக்கெட் தொடரான ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் மும்பையில் கோலாகலமாக துவங்கி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த மார்ச் 26-ஆம் தேதியன்று புகழ்பெற்ற மும்பை வான்கடே மைதானத்தில் துவங்கிய இந்த தொடர் துவங்கிய ஒரு வாரத்திலேயே சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியை தவிர ஏனைய அனைத்து போட்டிகளும் கடைசி ஓவர் வரை சென்று ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகின்றன.

IPL 2022

- Advertisement -

வரும் மே 29-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த தொடரில் சாம்பியன் பட்டத்தை வெல்வதற்காக 10 அணிகளும் 74 போட்டிகளில் பலப்பரீட்சை நடத்த உள்ளன. இந்த தொடரை 25% ரசிகர்கள் மைதானத்தில் இருந்தும் ஏனைய ரசிகர்கள் தொலைக்காட்சி வாயிலாகவும் கண்டு களித்து வருகிறார்கள்.

ஏங்கும் பாகிஸ்தான்:
இந்தியா மட்டுமல்லாது இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட உலகின் அனைத்து முக்கிய நாடுகளிலும் இந்த ஐபிஎல் தொடர் மிகவும் பிரபலமாக இருந்து வருகிறது. குறிப்பாக இலங்கை, வங்கதேசம் போன்ற ஆசிய கண்டத்தைச் சேர்ந்த இந்தியாவின் அண்டை நாடுகளை சேர்ந்த ரசிகர்கள் இந்த தொடரை மிகுந்த ஆவலுடன் பார்த்து வருகிறார்கள். அவர்கள் தங்கள் நாட்டைச் சேர்ந்த வீரர்கள் இந்த தொடரில் எப்படி சிறப்பாக செயல்படுகிறார்கள் என்பதையும் கவனித்து வருகிறார்கள்.

Pakistan-Fans

மறுபுறம் இரு நாடுகளுக்கு இடையே நிலவும் எல்லை பிரச்சினை காரணமாக கடந்த பல வருடங்களாக இந்த புகழ்பெற்ற ஐபிஎல் தொடரில் பாகிஸ்தான் வீரர்கள் விளையாட முடிவதில்லை. அதனால் கடுப்பான பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடந்த வருடம் ஒரு கட்டத்தில் ஐபிஎல் தொடரை தங்கள் நாட்டில் ஒளிபரப்புவதற்கு தடை விதித்திருந்தது. இருப்பினும் கூட பல பாகிஸ்தான் ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் தொடர்ந்து ஐபிஎல் தொடரை பார்த்து வருகிறார்கள்.

- Advertisement -

பாகிஸ்தானின் பேமஸ் ஐபிஎல் அணி:
இந்நிலையில் பாகிஸ்தான் ரசிகர்களிடம் மிகவும் புகழ்பெற்ற ஐபிஎல் அணி எது என்பது பற்றி பாகிஸ்தானின் முன்னாள் நட்சத்திர அதிரடி வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “எங்களுக்கு மிகவும் பிடித்த அணி பஞ்சாப் ஆகும். ஏனெனில் நாங்கள் நடத்தும் பிஎஸ்எல் தொடரில் பஞ்சாப்பிலிருந்து ஒரு அணி விளையாடுகிறது. அதுதான் லாகூர் க்லண்டர்ஸ். அவர்களும் பஞ்சாப் அணியை போலவே கடந்த சில வருடங்களாக பிஎஸ்எல் கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வந்தனர். இருப்பினும் ஒரு வழியாக இந்த வருடம் இறுதிப் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றனர். எனவே எங்கள் நாட்டில் இருக்கும் பஞ்சாப் அணி கோப்பையை வென்ற காரணத்தால் உங்கள் நாட்டில் இருக்கும் பஞ்சாப் எதையாவது செய்ய வேண்டும். இந்த வருடம் அவர்கள் நல்ல துவக்கத்தை பெற்றுள்ளார்கள் என்றாலும் அடுத்த போட்டிகளில் என்ன செய்கிறார்கள் என பொருத்திருந்து பார்ப்போம்” என கூறினார்.

Akhtar

அவர் கூறுவது போல இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானை ஒட்டி பஞ்சாப் மாநிலம் உள்ளது. அதை ஒட்டிய பாகிஸ்தான் பகுதிகளில் நிறைய பஞ்சாப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் வசிக்கின்றனர். லாகூர் பகுதியாக இருக்கும் அந்த நகரை மையப்படுத்தி லாகூர் க்லண்டர்ஸ் என்ற அணி பாகிஸ்தான் பிரீமியர் லீக் தொடரில் ஆரம்பம் முதல் விளையாடி வந்தது. இருப்பினும் ஆரம்ப காலங்களில் தடுமாறி வந்த அந்த அணி கோப்பையை வெல்ல முடியாமல் விமர்சனங்களுக்கு உள்ளாகி வந்த நிலையில் சமீபத்தில் நடந்த பிஎஸ்எல் 2022 தொடரில் இளம் வீரர் ஷாகின் அப்ரிடி தலைமையில் அபாரமாக செயல்பட்டு முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது.

- Advertisement -

கப் அடிக்குமா பஞ்சாப்:
அதன் வகையில் பிஎஸ்எல் தொடரில் லாகூர் அணி மிகவும் பிரபலம் என்பதால் அதன் பக்கத்தில் இருக்கும் பஞ்சாப் கிங்ஸ் அணி இதுவரை கோப்பையை வாங்காவிட்டாலும் பாகிஸ்தானில் மிகவும் பிரபலம் என சோயப் அக்தர் கூறியுள்ளார். அதே சமயம் பல வருட போராட்டத்திற்குப் பின் இம்முறை முதல் முறையாக லாகூர் அணி கோப்பையை வென்றது போல் அதன் பக்கத்தில் இருக்கும் பஞ்சாப் அணியும் கண்டிப்பாக கோப்பையை வெல்லும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

pbks

அதற்கு ஏற்றார் போல் இது முறை ஒருமுறை கூட கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வரும் பஞ்சாப் கிங்ஸ் அணி இந்த முறை இளம் வீரர் மயங்க் அகர்வால் தலைமையில் முதல் முறையாக ஐபிஎல் தொடரில் களமிறங்கியது. அதிலும் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் அந்த அணி நிர்ணயித்த 206 ரன்கள் இலக்கை அசால்டாக சேசிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் போட்டியிலேயே அபார வெற்றி பெற்று இந்த வருடத்தின் ஐபிஎல் தொடரை வெற்றிகரமாக தொடங்கியுள்ளது.

இதையும் படிங்க : இது என்ன கிரவுன்டா இல்ல. ஸ்விமிங் பூல்லா? மைதானம் குறித்து பேட்டியளித்த – சி.எஸ்.கே கோச்

ஐபிஎல் வரலாற்றில் வெற்றிகரமான அணியாக விளங்கும் மும்பை, சென்னை உள்ளிட்ட அணிகள் கூட இந்த வருடம் தங்களது முதல் போட்டியிலேயே பரிதாப தோல்வி அடைந்து மோசமான தொடக்கத்தை பெற்றுள்ளது. எனவே இந்த முறை அபார தொடக்கத்தை பெற்றுள்ள பஞ்சாப் கண்டிப்பாக கோப்பையை முத்தமிடும் என சோயப் அக்தரை போலவே அந்த அணி ரசிகர்களும் நம்புகின்றனர்.

Advertisement