இது என்ன கிரவுன்டா இல்ல. ஸ்விமிங் பூல்லா? மைதானம் குறித்து பேட்டியளித்த – சி.எஸ்.கே கோச்

Fleming
- Advertisement -

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிராக மும்பையில் நடைபெற்ற 7வது லீக் போட்டியில் சென்னை அணி முதலில் விளையாடி 210 ரன்களை பிரம்மாண்டமாக குவித்தும் தோல்வியை தழுவியது சமூக வலைத்தளத்தில் பெரிய விமர்சனத்தை எழுப்பியது. அதிலும் குறிப்பாக சென்னை அணி சிறப்பாக பந்து வீசி வந்த வேளையில் இறுதி இரண்டு ஓவர்களுக்கு 34 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது 19-வது ஓவரை வீசிய ஷிவம் துபே 25 ரன்கள் விட்டுக் கொடுக்க இறுதி ஓவரில் லக்னோ எளிதாக ரன்களை சேஸிங் செய்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

CSK Lost to LSG

- Advertisement -

இந்த தோல்விக்கு காரணமாக மைதானத்தில் இருந்த அதிக அளவு பனிப்பொழிவு காரணமாக இருந்தது என அனைவரும் தங்களது கருத்துகளை கருத்துகளை வெளிப்படையாக தெரிவித்திருந்தனர். இந்நிலையில் சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் மைதானத்தில் தன்மை குறித்து பேசுகையில் :

இந்த போட்டியில் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு போதிய அளவு பந்துவீச நாங்கள் வாய்ப்பினைப் வழங்கவில்லை. ஏனெனில் பனியின் தாக்கம் அதிகமாக இருந்ததால் சுழற்பந்துவீச்சாளர்கள் நினைத்தபடி பந்தை திருப்ப முடியவில்லை. மைதானத்தின் ஈரத்தன்மை நயாகரா நீர்வீழ்ச்சி போல இருந்தது.

Dube

அதனால் பேட்டிங்க்கு சாதகமான இந்த மைதானத்தில் லக்னோ அணி வீரர்கள் சிறப்பாக விளையாடினார்கள். சுழற்பந்துவீச்சாளர்கள் மொத்தமாக மூன்று ஓவர்கள் மட்டுமே வீசியதால் இறுதிகட்டத்தில் இக்கட்டான சூழ்நிலை உருவாகியது. இருப்பினும் லக்னோ அணியின் ஆட்டத்தை பாராட்டி ஆகவேண்டும். ஒரு ஓவர் ஆட்டத்தை மாற்றும் என்று நாங்கள் நினைத்தோம்.

- Advertisement -

அதேபோன்று 19-வது ஓவரில் அவர்கள் அதிரடியாக விளையாடி ரன் குவித்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றுவிட்டனர். சி.எஸ்.கே அணியால் இந்த சரிவில் இருந்து மீண்டு வரமுடியும். எங்கள் அணியில் உள்ள இளம் வீரரான முகேஷ் முதல் போட்டியில் தான் விளையாடியுள்ளார்.

இதையும் படிங்க : ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக பாக் முன்னாள் ஜாம்பவான் நியமனம் – அதிகாரபூர்வ அறிவிப்பு

அதேபோன்று துஷார் பாண்டே சில போட்டிகளில் மட்டுமே விளையாடிய அனுபவம் உள்ளவர். இவர்கள் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்று நினைத்தேன். இருந்தாலும் அவர்களுக்கு இந்த போட்டி கடினமாகவே இருந்தது என பிளமிங் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement