ஆதரவற்ற குழந்தைகளுக்காக நிதிதிரட்ட சொன்னதை செய்த ராகுல் – ரசிகர்கள் வாழ்த்து

Rahul
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான கே.எல் ராகுல் கடந்த 18 ஆம் தேதி தனது 28வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு சமூக வலைதளம் மூலம் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும் அவரது பெண் தோழியான அதியா ஷெட்டியும் தனது வாழ்த்துக்களை தெரிவித்து அமர்க்களம் படுத்தினார். ஒருபுறம் பிறந்தநாள் வாழ்த்துக்கள் குவிந்து கொண்டிருக்க ராகுலோ பெரிய ஆர்ப்பாட்டம் இல்லாமல் தனது வீட்டிலேயே பிறந்தநாளை கொண்டாடாமல் சுய தனிமைப்படுத்துதலில் இருக்கிறார்.

Rahul

- Advertisement -

இந்நிலையில் ஒரு மாதமாக வீட்டில் முடங்கி இருக்கும் ராகுல் தனது பிறந்தநாள் அன்று அறக்கட்டளை மூலமாக குழந்தைகளுக்காக உதவியை செய்ய முன்வந்துள்ளார். அதன்படி கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடரில் பயன்படுத்திய கிரிக்கெட் பேட் மற்றும் கிரிக்கெட் கிட் ஆகியவற்றை ஏலம் விடுவதாக அவர் தெரிவித்தார்.

இந்த ஏலத்தில் கிடைக்கும் பணத்தை மொத்தமாக அறக்கட்டளை மூலமாக குழந்தைகளுக்கு கொடுக்க முடிவு செய்தார். அதன்படி இந்த ஏலத்தில் அவர் விட இருக்கும் பொருட்கள் குறித்து பேசிய போது அவர் குறிப்பிட்டதாவது : நான் எனது கிரிக்கெட் பேட், கிளவுஸ், ஹெல்மெட் மற்றும் சில ஜெர்சிக்களை ஏலத்தில் விட முடிவு செய்துள்ளேன்.அதில் வரும் நிதியினை அவேர் அறக்கட்டளைக்கு முழுவதுமாக கொடுக்க உள்ளேன் என்றும் அறிவித்திருந்தார்.

Rahul

அதன்படி ராகுல் பயன்படுத்திய பேட்டை 2 லட்சத்து 64 ஆயிரத்து 228 ரூபாய்க்கும், டெஸ்ட் ஜெர்சியை 1 லட்சத்து 32 ஆயிரத்து 744 ரூபாய்க்கும், ஒருநாள் ஜெர்சியை 1 லட்சத்து 13 ஆயிரத்து 240 ரூபாய்க்கும், தன்னுடைய ஹெல்மெட்டை 1 லட்சத்து 22 ஆயிரத்து 677 மற்றும் டி20 ஜெர்சியை 1 லட்சத்து 4 ஆயிரத்து 824 ரூபாய்க்கும் ஏலம் விடப்பட்டது.

- Advertisement -

இந்த ஏலத்தின் மூலம் மொத்தத் தொகையாக 7 லட்சத்து 99 ஆயிரத்து 553 ரூபாய் கிடைத்தது. இந்த மொத்த பணத்தையும் ராகுல் தற்போது குழந்தைகள் நலன் காக்கும் அறக்கட்டளைக்கு மொத்தமாக வழங்கியுள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கேஎல் ராகுல் நான் என்னுடைய கிரிக்கெட் உபகரணங்களை பாரத் ஆர்மி அமைப்புடன் ஏலத்தில் என தீர்மானித்தேன்.

இந்த ஏலத்தின் மூலம் கிடைத்த இந்த தொகை ஆதரவற்ற குழைந்தைகளுக்கு மிகவும் முக்கியமானது. உணவின்றி தவித்து வரும் குழந்தைகளுக்கு இதன் மூலம் பொருள் உதவி செய்ய வாய்ப்பாக அமைந்தது. இந்த கொரோனா காலத்தில் நாம் ஒன்றிணைந்து செயல்படுவோம் என்று ராகுல் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement