IND : பாண்டியா மற்றும் ராகுலுக்கு தண்டனையை உறுதி செய்தது – பி.சி.சி.ஐ அறிவிப்பு

கடந்த ஆண்டு இறுதியில் காபி வித் கரண் என்ற தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினர்களாக இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்களான ஹார்டிக் பாண்டியா மற்றும் ராகுல்

Rahul
- Advertisement -

கடந்த ஆண்டு இறுதியில் காபி வித் கரண் என்ற தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினர்களாக இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்களான ஹார்டிக் பாண்டியா மற்றும் ராகுல் ஆகியோர் கலந்து கொண்டனர். அந்த நிகழ்ச்சியில் பெண்கள் குறித்த அவமரியாதையான சர்ச்சையான கருத்துக்களை இருவரும் பகிர்ந்தனர்.

Pandya

- Advertisement -

இந்த சம்பவம் பெரிய பரபரப்பையும், மக்களின் வெறுப்பையும் பெற அவர்கள் இருவரின் மீதும் சரமாரியாக விமர்சனங்களும் எழுந்தன. நாடு முழுவதும் இருந்து அவர்களுக்கு கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன. இதனால் இருவரும் ஆஸ்திரேலிய தொடரின் பாதியில் இந்திய அணியில் இருந்து தடை செய்யப்பட்டனர்.

பிறகு அவர்களின் கிரிக்கெட் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும், உலகக்கோப்பை இந்திய அணியை கருத்தில் கொண்டும் அவர்கள் மீதான தடை நீக்கப்பட்டு இணைந்தனர். தற்போது இங்கிலாந்தில் நடைபெற உள்ள உலகக்கோப்பை அணிக்கும் இருவரும் தேர்வாகி உள்ளனர். இந்நிலையில் அவர்கள் இருவரின் மீது இருந்த வழக்கிற்கு தண்டனையை உறுதி செய்தது பி.சி.சி.ஐ

Pandya 1

அதன்படி ராகுல் மற்றும் பாண்டியா ஆகியோர் தலா 20 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அதில் 10 லட்ச ரூபாயை புல்வாமா தாக்குதலில் பலியான பத்து குடும்பங்களுக்கு தலா 1 லட்சம் என 10 லட்சமும், பார்வை அற்றோர் இந்திய கிரிக்கெட் அமைப்பிற்கு 10 லட்சம் என இருவருக்கும் தலா 20 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டது. இதனால் இவர்கள் உலகக்கோப்பை போட்டிகளில் பங்கேற்பது உறுதியாகியுள்ளது.

Advertisement