ஐ.பி.எல் வரலாற்றில் இடம்பிடித்த ராகுல்-அகர்வால் ஜோடி. 9 ஆண்டு சாதனையை முறியடித்து அசத்தல் – விவரம் இதோ

Rahul
- Advertisement -

ஐபிஎல் தொடர் தொடங்கிய தற்போது கோலாகலமாக நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஒன்பதாவது லீக் போட்டியில் ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், கேஎல் ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி அபாரமாக விளையாடி 223 ரன்கள் குவித்தது. குறிப்பாக அந்த அணியின் துவக்க வீரர்கள் கேஎல் ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் ருத்ரதாண்டவம் ஆடினர்.

- Advertisement -

இதில் மயங்க் அகர்வால் அற்புதமாக 25 பந்துகளில் அரைசதம், 45 பந்துகளில் சதம் விளாசி பட்டையைக் கிளப்பினாலும் ராகுல் கேப்டனுக்கே உரித்தான பாணியில் பொறுப்பினை உணர்ந்து விளையாடி அரைசதம் அடித்தார். இந்த போட்டியில் இருவரும் 16ஆவது ஓவர் வரை நின்று விளையாடினார்கள் .

அவர்களின் இந்த அதிரடியால் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. ஒரு கட்டத்தில் அவர்களை எப்படி அவுட் ஆக்குவது என்று புரியாமல் பந்து வீசிக்கொண்டிருந்தனர். அதன்பின்னர் இவர்களது பார்ட்னர்ஷிப் 183 ரன்களில் பிரிந்தது. இதன் காரணமாக கடந்த 11 வருடத்தில் இல்லாத சாதனையை தற்போது படைத்திருக்கிறார்கள்.

agarwal

2011 ஆம் ஆண்டு ஆடம் கில்கிறிஸ்ட் மற்றும் பால் வல்தாட்டி ஆகிய இருவரும் 136 ரன்கள் எடுத்திருந்தது. இதுவே பஞ்சாப் அணி சார்பாக அடிக்கப்பட்ட அதிகபட்ச துவக்க பார்ட்னர்ஷிப் ஆக இருந்தது. இந்த சாதனையை தற்போது கேஎல் ராகுல் மற்றும் அகர்வால் இருவரும் சேர்ந்து முறியடித்து இருக்கின்றனர்.

Agarwal 2

மேலும் ஒட்டுமொத்த ஐ.பி.எல் வரலாற்றில் அதிகபட்ச பாட்னர்ஷிப் வரிசையில் 3 ஆம் இடம் பிடித்தது. இதனை தொடர்ந்து ஆடிய ராஜஸ்தான் அணி அதிரடியாக விளையாடி 19.3 ஓவர்களில் 226 ரன்கள் அடித்து பட்டையை கிளப்பியது. இதன்மூலம் இந்த போட்டியில் பல்வேறு சாதனைகள் படைக்க பட்டிருக்கின்றது அந்த அணியின் சஞ்சு சாம்சன் அதிகபட்சமாக 85 ரன்கள் விளாசினார்.

Advertisement