டி20 கிரிக்கெட்டில் 3 ஆவது ஆப்கானிஸ்தான் வீரராக ரஹ்மனுல்லா குர்பாஸ் நிகழ்த்திய சாதனை – விவரம் இதோ

Gurbaz
- Advertisement -

இப்ராஹிம் ஷத்ரான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணியானது முகமது வாசிம் தலைமையிலான ஐக்கிய அரபு அமிரேட்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் தற்போது பங்கேற்று விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டியானது டிசம்பர் 29-ஆம் தேதி ஷார்ஜாவில் நடைபெற்று முடிந்தது.

இந்த போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆப்கானிஸ்தான் அணியானது 72 ரன்கள் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு அமிரேட்ஸ் அணியை வீழ்த்தி இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

- Advertisement -

அந்த வகையில் நடைபெற்று முடிந்த இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஐக்கிய அரபு அமீரக அணியானது பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணியானது துவக்கத்திலிருந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 203 ரன்களை குவித்தது.

பின்னர் 204 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஐக்கிய அரபு அமீரக அணியானது 20 ஓவர்களின் முடிவில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 131 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் காரணமாக ஆப்கானிஸ்தான் அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியின் போது ஆப்கானிஸ்தான் அணியின் துவக்க வீரராக விளையாடிய ரஹ்மனுல்லா குர்பாஸ் டி20 கிரிக்கெட்டில் மாபெரும் சாதனை ஒன்றினை நிகழ்த்தி அசத்தியுள்ளார். அந்த வகையில் இந்த போட்டியில் 52 பந்துகளை சந்தித்த அவர் 7 பவுண்டரி மற்றும் 7 சிக்ஸர்கள் என 100 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சதம் அடித்த மூன்றாவது ஆப்கானிஸ்தான் வீரர் என்ற சாதனையை அவர் நிகழ்த்தி இருந்தார்.

இதையும் படிங்க : ஒரே பவுலர் 45 நிமிடம்.. 2வது போட்டியில் கம்பேக் கொடுக்க ரோஹித் சர்மா போடும் பிளான்

இதற்கு முன்னதாக ஆப்கானிஸ்தான் அணி சார்பாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் முகமது ஷஷாத் மற்றும் ஹஸ்ரத்துல்லா ஷசாய் ஆகிய இருவர் மட்டுமே சதம் அடித்திருந்த வேளையில் தற்போது மூன்றாவது ஆப்கானிஸ்தான் வீரராக குர்பாஸ் சர்வதேச டி20 போட்டிகளில் தனது முதல் சதத்தை பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement