ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் செப்டம்பர் 20-ஆம் தேதி நேற்று நடைபெற்ற தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி விளையாடியது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 311 ரன்களை குவித்தது.
விராட் கோலியை சமன் செய்த ரஹ்மானுல்லா குர்பாஸ் :
ஆப்கானிஸ்தான் அணி சார்பாக அந்த அணியின் நட்சத்திர துவக்க வீரரான் குர்பாஸ் 105 ரன்களையும், அஸ்மத்துல்லா ஓமர்சாய் 86 ரன்களையும் குவித்தனர். இப்படி பலம் வாய்ந்த தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக ஆப்கானிஸ்தான் அணியின் அதிரடியான ஆட்டம் அனைவரது மத்தியிலும் பாராட்டினை பெற்றது.
அதோடு அந்த அணியின் நட்சத்திர வீரரான ரஹ்மானுல்லா குர்பாஸ் விராட் கோலியின் மாபெரும் சாதனை ஒன்றினையும் சமன் செய்து அசத்தியுள்ளார். அதாவது இந்த போட்டியில் துவக்க வீரராக களமிறங்கி 110 பந்துகளை சந்தித்த அவர் 10 பவுண்டரி மற்றும் 3 சிக்சர் என 105 ரன்கள் குவித்தார்.
அவர் அடித்த இந்த சதத்தின் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது ஏழாவது சதத்தை பதிவு செய்துள்ளார். இதன் மூலம் அவர் படைத்த சாதனை யாதெனில் : இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி 23 வயதினை தொடுவதற்கு முன்பாகவே சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் ஏழு சதங்களை விளாசியிருந்தார்.
அதேபோன்று தற்போது ரஹ்மானுல்லா குர்பாசும் தனது 22-ஆவது வயதிலேயே ஒருநாள் கிரிக்கெட்டில் ஏழாவது சாதத்தை பூர்த்தி செய்து விராட் கோலி அந்த சாதனையை சமன் செய்துள்ளார். தற்போது வரை குர்பாஸ் 42 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 38 ரன்கள் சராசரியுடன் 1572 ரன்களை குவித்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் அவரது அதிகபட்ச ரன்களாக 151 ரன்கள் இருக்கின்றன.
இதையும் படிங்க : நல்லவேளை தப்பிச்சேன்.. இல்லனா யுவ்ராஜ் சிங் 7 சிக்ஸர்களை அடிச்சிருப்பாரு – ஸ்டூவர்ட் பிராட் பகிர்வு
இந்தப் பட்டியலில் 23 வயதிற்கு முன்பாக அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற பெருமையை தென்னாப்பிரிக்க வீரர் குவிண்டன் டிகாக் தன்வசம் வைத்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் அவர் 23 வயதிற்கு முன்பாகவே சதங்களை விளாசியிருந்தது குறிப்பிடத்தக்கது.



