கடந்த 2007-ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் போது டர்பன் நகரில் நடைபெற்ற சூப்பர் 8 லீக் சுற்று போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்திய யுவராஜ் சிங் ஸ்டூவர்ட் பிராட் வீசிய ஒரு ஓவரில் 6 சிக்ஸர்களை அடித்ததோடு 12 பந்துகளில் அரைசதம் அடித்து யாரும் நெருங்க முடியாத சாதனையை நிகழ்த்தி அசத்தியிருந்தார்.
நல்லவேளையா யுவ்ராஜ் சிங்கிடம் இருந்து தப்பிச்சேன் :
இப்படி 6 பந்துகளில் 6 சிக்ஸர் அடித்து அசத்திய யுவராஜ் சிங்கின் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டு 17 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள வேளையில் அந்த சம்பவம் குறித்து ஏற்கனவே யுவராஜ் சிங் தனது நினைவுகளை பகிர்ந்திருந்தார். இந்நிலையில் தற்போது 17 ஆண்டுகள் கழித்து அன்று நடைபெற்ற சம்பவம் குறித்து இங்கிலாந்து அணியின் வீரர் ஸ்டுவர்ட் பிராடும் தனது நினைவுகளை பகிர்ந்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில் : 17 ஆண்டுகளாக நான் அந்த போட்டியை மீண்டும் எந்த ஒரு வீடியோவிலும் பார்த்தது கிடையாது. இதை நான் ஒப்புக்கொள்ள வேண்டும். ஏனெனில் அந்த அளவிற்கு யுவராஜ் சிங் அந்த ஒரு ஓவரில் எனது பந்துவீச்சை சிதைத்து விட்டார். அதிலும் குறிப்பாக அந்த ஓவரில் ஒரு பந்தை நான் நோபாலாக வீசியிருந்தேன்.
ஆனால் அம்பயர் அப்போது அந்த பந்திற்கு நோபால் கொடுக்காதது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம். இல்லையென்றால் அந்தப் பந்தும் சிக்ஸராக மாறி ஏழு சிக்ஸர்களை யுவராஜ் சிங் விளாசியிருப்பார் நல்ல வேலையாக நான் அதிலிருந்து தப்பித்து விட்டேன் என ஸ்டுவர்ட் பிராடு தனது நினைவை பகிர்ந்து இருந்தார். அதேபோன்று இந்த சம்பவம் குறித்து யுவராஜ் சிங் பேசுகையில் கூறியதாவது :
அந்த போட்டியின் போது ஃபிளின்டாப் என்னை சண்டைக்கு இழுத்ததும் நான் மிகவும் கோபமடைந்து விட்டேன். அதனால் அடுத்த ஓவரை யார் வீசினாலும் சிக்ஸர்களை விளாச வேண்டும் என்று நினைத்துக் கொண்டுதான் கிரீசுக்கு சென்றேன். அப்போது முதல் ஐந்து பந்துகளிலும் 5 சிக்ஸர்களை அடித்ததும் நிச்சயம் ஆறாவது பந்திலும் சிக்ஸர் அடிக்க முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. அதன்படியே நான் 6 சிக்ஸர்களை விளாசினேன்.
இதையும் படிங்க : பும்ரா மாதிரி ஜொலிக்க திறமை மட்டும் போதாது இது வேணும்.. உலகம் முழுக்க இதை செஞ்சுருக்காரு.. தமீம் இக்பால்
அப்போது தோனி கூட என்னிடம் வந்து எப்பொழுதெல்லாம் நீங்கள் எனக்கு பின்னால் பேட் செய்ய வருகிறீர்களோ அப்போதெல்லாம் உங்களது ஸ்ட்ரைக் ரேட் இரண்டு மடங்காக இருக்கிறது என்று என்னை பாராட்டி விட்டு சென்றார். இங்கிலாந்து அணிக்கு எதிரான அந்த போட்டியின் போது 16 பந்துகளை சந்தித்த யுவராஜ் சிங் 3 பவுண்டரி மற்றும் 7 சிக்ஸர்கள் என 58 ரன்கள் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.



