IND vs WI : இந்தியா வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான அணியில் 2 ஆண்டுகள் கழித்து இடம்பிடித்த – வெயிட்டான வீரர்

IND-vs-WI
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியானது அங்கு நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த தொடருக்கான டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வேளையில் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

indvswi

- Advertisement -

அதனைத்தொடர்ந்து எஞ்சியிருந்த 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியையும் பிசிசிஐ கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவித்ததால் தற்போது இந்திய அணி தங்களது முழு அணி வீரர்களின் பட்டியலையும் வெளியிட்டு விட்டது. ஆனால் வெஸ்ட் இண்டீஸ் அணி மட்டும் இன்னும் இந்திய அணிக்கு எதிரான தொடருக்கான தங்களது அணியை அறிவிக்காமல் இருந்து வந்தது.

இவ்வேளையில் தற்போது இந்த டெஸ்ட் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டிக்கான தங்களது அணியை வெஸ்ட் அணியின் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த அணியே இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான அணியாகவும் இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

வரும் ஜூலை 12-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதி வரை டோமினிக்கா நகரில் இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியும், ஜூலை 20-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை டிரினிடாட் நகரில் இரண்டாவது டெஸ்ட் போட்டியும் நடைபெற உள்ளது. இந்த டெஸ்ட் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் உலகின் அதிக எடை கொண்ட கிரிக்கெட் வீரராக பார்க்கப்படும் ராகிம் கார்ன்வால் மீண்டும் இரண்டு ஆண்டுகள் கழித்து வெஸ்ட் இண்டீஸ் அணியில் கம்பேக் கொடுத்துள்ளார்.

- Advertisement -

கடந்த 2019-ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் இதுவரை 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இரண்டு அரை சதங்களுடன் 238 ரன்கள் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டிக்கான வெஸ்ட் இண்டிஸ் அணி வீரர்களின் லிஸ்ட் இதோ :

இதையும் படிங்க : ஃபேப் 4 பிளேயர்களில் விராட் கோலிக்கே இடமில்லை, இதுல பாபர் அசாம் வேறயா? முன்னாள் இந்திய வீரர் அதிரடி பேட்டி

1) கிரேக் பிராத்வைட், 2) ஜெர்மைன் பிளாக்வுட், 3) அலிக் அதானாஸ், 4) டேகனரைன் சந்தர்பால், 5) ரகீம் கார்ன்வால், 6) ஜோசுவா டா சில்வா, 7) ஷானன் கேப்ரியல், 8) ஜேசன் ஹோல்டர், 9) அல்ஸாரி ஜோசப், 10) கிர்க் மெக்கென்சி, 11) ரேமன் ரீஃபர், 12) கீமார் ரோச், 13) ஜோமெல் வாரிக்கன்.

Advertisement