பாகிஸ்தான் அணிக்கெதிரான முதல் டெஸ்டில் அற்புதமான சாதனையை நிகழ்த்திய முஷ்பிகுர் ரஹீம் – மெஹதி ஹசன் ஜோடி

Mushfiqur
- Advertisement -

வங்கதேச கிரிக்கெட் அணியானது தற்போது பாகிஸ்தான் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற்று வரும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. அதன்படி நடைபெற்று முடிந்த இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வங்கதேச அணியானது 10 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி அசத்தலான சாதனையை நிகழ்த்தியது.

அசத்திய வங்கதேச ஜோடி :

இந்த போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி தங்களது முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுகளை இழந்து 448 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

- Advertisement -

பின்னர் தொடர்ந்து தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடிய வங்கதேச அணியானது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 565 ரன்கள் குவித்தது. இதன் காரணமாக 117 ரன்கள் பின்தங்கிய நிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை துவங்கிய பாகிஸ்தான் அணி வங்கதேச அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 146 ரன்களுக்கு சுருண்டது.

இதன் காரணமாக 30 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு வங்கதேச அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதனை துரத்தி விளையாடிய வங்கதேச அணி 6.3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 30 ரன்கள் குவித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியின் போது பங்களாதேஷ் அணி சார்பாக முதல் இன்னிங்சில் விளையாடிய அனுபவ வீரர் முஷ்பிகுர் ரஹீம் மற்றும் மெகதி ஹாசன் ஆகியோர் பாகிஸ்தான் அணிக்கு எதிராக புதிய சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ளனர். அந்த சாதனை யாதெனில் : முதல் இன்னிங்சின் போது ஏழாவது விக்கெட்டுக்கு கைகோர்த்த ரஹீம் மற்றும் மெஹதி ஹாசன் ஆகியோர் 196 ரன்கள் சேர்த்து அசத்தினர்.

இதையும் படிங்க : சேவாக்கிற்காக அந்த 4 பேர் எதிர்த்தாங்க.. உண்மையில் தவான் தான் என்னை காப்பாத்துனாரு.. சந்தீப் பாட்டில்

இதன் மூலம் பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஏழாவது விக்கெட்டுக்கு அதிக ரன்கள் சேர்த்த ஜோடியாக இந்த ஜோடி சாதனை நிகழ்த்தியுள்ளது. இதற்கு முன்பாக 1976 ஆம் ஆண்டு நியூசிலாந்து வீரர்கள் ஹார்ட்லி மற்றும் லீஸ் ஆகியோர் இணைந்து 186 ரன்கள் குவித்ததே சாதனையாக இருந்தது. அந்த சாதனையை தற்போது ரஹீம் மற்றும் மிராஸ் ஆகியோர் தகர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement