சேவாக்கிற்காக அந்த 4 பேர் எதிர்த்தாங்க.. உண்மையில் தவான் தான் என்னை காப்பாத்துனாரு.. சந்தீப் பாட்டில்

Sandeep Patil 2
- Advertisement -

இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் சர்வதேச மற்றும் உள்ளூர் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக கடந்த சில தினங்களுக்கு முன் அறிவித்தார். டெல்லியைச் சேர்ந்த அவர் 2010ஆம் ஆண்டு அறிமுகமாகி ஆரம்பக் காலங்களில் சுமாராக விளையாடினார். இருப்பினும் 2013 சாம்பியன்ஸ் டிராபியில் அப்போதைய கேப்டன் தோனி அவரை துவக்க வீரராக அறிமுகப்படுத்தினார்.

அந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்க பேட் விருது வென்ற தவான் இந்தியா சாம்பியன் பட்டம் வெல்ல உதவினார். அப்போதிலிருந்து ஐசிசி தொடர்களில் அசத்திய அவர் 3 வகையான கிரிக்கெட்டிலும் இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றினார். மேலும் ஐசிசி ஒருநாள் தொடரில் உலகிலேயே அதிக பேட்டிங் சராசரியை (65.15) கொண்ட வீரராகவும் அவர் சாதனை படைத்தார்.

- Advertisement -

தவானுக்கு எதிர்ப்பு:

அதனால் ரசிகர்களால் மிஸ்டர் ஐசிசி என்றழைக்கப்பட்ட தவான் தற்போது 38 வயதில் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்நிலையில் 2013 பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் விரேந்தர் சேவாக் 3 இன்னிங்ஸில் 27 ரன்கள் மட்டுமே எடுத்து சுமாராக விளையாடினார். அப்போது அவரை நீக்கலாம் என்று சொன்னதற்கு எஞ்சிய 4 தேர்வுக்குழு உறுப்பினர்கள் தம்மை எதிர்த்ததாக அப்போதைய தேர்வுக்குழு தலைவர் மற்றும் முன்னாள் இந்திய வீரர் சந்தீப் பாட்டில் கூறியுள்ளார்.

இருப்பினும் அதையும் தாண்டி கொடுத்த வாய்ப்பில் ஷிகர் தவான் 187 (174) ரன்கள் விளாசி தன்னுடைய முடிவையும் பதவியையும் காப்பாற்றியதாக சந்தீப் பாட்டில் பாராட்டியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “ஃபார்மில் இருக்கும் ஒரு இளம் வீரருக்கு நீங்கள் ஆதரவு கொடுக்க வேண்டும். சரியான நபருக்கு சரியான நேரத்தில் வாய்ப்பு கிடைப்பது மிகவும் முக்கியமாகும்”

- Advertisement -

காப்பாற்றிய தவான்:

“அந்த சமயத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா ஏ அணிக்காக விளையாடிய ஷிகர் தவான் இரட்டை சதமும், சதமும் அடித்திருந்தார். அதனால் நாங்கள் கடினமான முடிவு எடுக்க வேண்டியிருந்தது. சேவாக்கிற்கு பதிலாக தவானை தேர்ந்தெடுத்த என்னுடைய முடிவுக்கு எனது 4 துணை தேர்வாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். ஆனால் அந்த எதிர்ப்புக்கு மத்தியில் நல்லது நடந்தது”

இதையும் படிங்க: உலகிற்கே நல்லது.. ஐசிசி பதவிக்காக பார்க்லேவை ஜெய் ஷா கட்டாயப்படுத்தினாரா? கவாஸ்கர் விமர்சனம்

“தவான் அறிமுகப் போட்டியிலேயே சதமடித்து என்னுடைய ஐடியாவை சரி என்று நிரூபித்தார். அதற்காக நான் பாராட்டுகளைப் பெற்றுக் கொள்ள விரும்பவில்லை. உண்மையில் எனது முடிவை சரியாக்கிய சிகர் தவானுக்கு தான் பாராட்டு கொடுக்க வேண்டும். அவர் என்னை காப்பாற்றினார்” என்று கூறினார். முன்னதாக அப்போட்டியில் 85 பந்துகளில் 100 ரன்கள் தொட்ட தவான் அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே அதிவேகமாக சதமடித்த வீரராக உலக சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement