ஆப்கானிஸ்தானுடன் இந்திய டெஸ்ட் தொடர்.! தாக்குப்பிடிக்குமா ரஹானே தலைமை..!

rahaney
- Advertisement -

சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் தனது டெஸ்ட் அங்கீகாரத்தை பெற்ற அஃப்கானிஸ்தான் அணி, தனது முதல் டெஸ்ட் போட்டியை விளையாடுவதற்காக நாளை(ஜூன் 14) இந்தியவருகிறது. நாளை பெங்களூரு சின்ன சாமி மைதானத்தில் நடைபெற உள்ள இந்த போட்டியில் இந்திய அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள அஜிங்கிய ரஹானே பொறுப்பேற்று இந்திய அணியை வழிநடத்த இருக்கிறார்.

ajinkiyarahaney

- Advertisement -

இதுவரை இந்திய அணியின் கேப்டனாக இருந்த விராட் கோலி முதுகில் ஏற்பட்ட காவல் காரணமாக தற்காலிக ஓய்வில் இருக்கிறார். அதனால் கோலிக்கு பதிலாக இந்திய அணியின் கேப்டனாக அஜிங்கிய ரஹானே இந்த டெஸ்ட் போட்டிக்கு அறிவிக்கபட்டுள்ளார். சமீபத்தில் வங்கதேச அணியுடன் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி அந்த தொடரில் 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று புதிய உத்வேகத்தில் இருக்கிறது.

மேலும் அந்த அணியில் உள்ள ஐபிஎல் போட்டியில் கலக்கிய ஆப்கானிஸ்தான் சூழல் அளித்து வீச்சாளர் ரஷீத் கான் மற்றும் அந்த அணியின் மற்றுமொரு பந்து வீச்சாளரான முஜீப் ரஹ்மான் ஆகியோர் இந்தியாவுக்கு மிக சவாலாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போட்டியில் விருத்திமான் சஹா இடம்பெற்றிருந்தார். ஆனால், அவருக்கு சமீபத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக அவருக்கு பதிலாக தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் இடம்பிடித்துள்ளார்.

rahane

முன்னணி வீரர்களாக கோலி ,தோனி ஆகிய அனுபவமிக்க வீரர்கள் இல்லாத போதும் இந்திய அணி வலுவான அணியாகத்தான் இருக்கின்றது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை வீழ்த்த மிக ஆயத்தமாக உள்ளது ஆப்கானிஸ்தான் அணி. மேலும், இதுவரை டெஸ்ட் போட்டிகளில் ஜொலிக்காத ரஹானேவிற்கு இந்த முறை கேப்டன் என்ற பெரிய பொறுப்பும் தலையில் ஏறியுள்ளது. எனவே, நாளை நடைபெற உள்ள இந்த போட்டி இரு அணிக்கும் ஒரு சவாலாக அமையும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

Advertisement