இவரை போன்ற வீரர் எதிரணியில் இருக்கும்வரை எவ்வளோ ரன் அடித்தாலும் பத்தாது – ரஹானே ஆதங்கம்

Rahane
- Advertisement -

நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்ற 8 ஆவது போட்டியில் சன் ரைசர்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்களை இழந்து 198 ரன்களை அடித்தது. அந்த அணி சார்பாக சாம்சன் 55 பந்துகளில் 102 ரன்களை அடித்தார். மேலும், கேப்டன் ரஹானே 70 ரன்களை அடித்தார்.

Srh

- Advertisement -

இதனால் சன் ரைசர்ஸ் அணிக்கு 199 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. தொடர்ந்து ஆட துவங்கிய சன் ரைசர்ஸ் அணியின் துவக்க ஆட்டக்காரர்களான வார்னர் மற்றும் பேர்ஸ்டோ சிறப்பான துவக்கத்தினை அளித்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 9.4 ஓவர்களில் 110 ரன்களை சேர்த்து. இதனால் பின்னால் வந்த வீரர்கள் எளிமையாக வெற்றிக்கான இலக்கினை அடித்தனர். இதனால் சன் ரைசர்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வார்னர் 69 ரன்களும், பேர்ஸ்டோ 45 ரன்களையும் குவித்தனர்.

தோல்விக்கு பிறகு பேசிய ராஜஸ்தான் கேப்டன் ரஹானே கூறியதாவது : 190 க்கு அதிகமான ரன்கள் என்பது இந்த மைதானத்தில் வெற்றிக்கு போதுமான ரன்களே. நானும் சாம்சனும் இணைந்து சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி. இந்த மைதானத்தில் பந்து சற்று நின்று வந்தது. அதனால் வெற்றிக்கு 150 ரன்களே போதும் என்று நினைத்தேன்.

ஆனால், வார்னர் போன்ற வீரர் எதிரணியில் அவ்வளவு சிறப்பாக ஆடும்போது நாங்கள் எவ்ளோ ரன்கள் அடித்தாலும் அது அணியின் வெற்றிக்கு போதாது. மேலும், இந்த போட்டியின் தோல்வி எனக்கு வருத்தம் அளிக்கிறது என்றும் ரஹானே தெரிவித்தார்.

Advertisement