நான் சந்தித்ததில் இவரே சிறந்த பந்துவீச்சாளர். இவர் எதிர்கொள்வது உண்மையிலேயே கஷ்டம் – ரஹானே ஓபன் டாக்

- Advertisement -

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் ரகானே தான் சந்தித்த பந்துவீச்சாளர்களிலேயே யார் மிகவும் சவாலான பந்துவீச்சாளர் என்பது குறித்து பேசியுள்ளார். இந்திய அணியின் துணை கேப்டனாக இருப்பவர் அஜின்கியா ரகானே. ஒருநாள் மற்றும் டி20 தொடரில் இந்திய அணியில் இல்லாவிட்டாலும் டெஸ்ட் அணியில் தனக்கான இடத்தை எப்போதும் வைத்திருக்கிறார். மேலும் இந்திய அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தாலும் தற்போது அவர் மீது டெஸ்ட் வீரர் என்கிற முத்திரை குத்தப்பட்டுள்ளதால் தற்போது டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே அவர் விளையாடிவருவது குறிப்பிடத்தக்கது.

Rahane 1

- Advertisement -

ரஹானே இந்திய அணியின் துணை கேப்டனாக இருப்பதால் இவருக்கு அணியில் எப்போதும் இடமுண்டு. அதனை தொடர்ந்து இந்திய அணி வெளிநாடுகளில் ஆடும் போதெல்லாம் இவர் தான் அணியின் நம்பிக்கை தூணாக இருப்பார். இந்நிலையில் தான் சந்தித்த பந்துவீச்சாளர்களிலேயே அதிக சவாலான பந்துவீச்சாளர் குறித்து பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்..

சர்வதேச அளவில் எல்லா பந்துவீச்சாளர்களையும் எதிர்கொள்வது மிகப் பெரிய சவால் தான். குறிப்பாக இங்கிலாந்து மண்ணில் ஜேம்ஸ் ஆண்டர்சனை எதிர்கொள்வது உண்மையிலேயே கடுமையான சவால். அவர் இங்கிலாந்து நாட்டின் சூழ்நிலையை சரியாக புரிந்து வைத்துள்ள பந்துவீச்சாளர்.

Anderson-3

இதுபோன்ற சூழ்நிலையில் மனதளவில் நாம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். சர்வதேச கிரிக்கெட் ஆட தயாராகிவிட்டால் எப்போதும் மனதை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார் ரஹானே. டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவிற்காக 4,000 ரன்கள் எடுத்துள்ளார். இந்தியாவைத் தவிர இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய வெளிநாட்டு மைதானங்களில் சதம் விளாசியுள்ளார் ரஹானே.

anderson 2

அவரின் நிதானமான ஆட்டமும், பொறுமையும் பலமுறை இந்திய அணியை நல்ல நிலைமைக்கு கொண்டு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. உலகின் பல்வேறு சிறந்த பந்துவீச்சாளர்களை சந்தித்துள்ள இவர் தனது திறமையான பேட்டிங் மூலம் அவர்களுக்கு கடுமையான போட்டி அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement