இப்படி நடந்தா பவுலர்களால் என்ன பண்ண முடியும்? தோல்விக்கு முழுக்காரணம் இதுதான் – ரஹானே வருத்தம்

Rahane
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 12-வது லீக் போட்டியானது நேற்று மும்பை மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஹார்டிக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், அஜின்க்யா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹார்டிக் பாண்டியா தங்களது அணி முதலில் பந்துவீசும் என்று அறிவித்தார்.

தோல்விக்கு முழுக்காரணம் இதுமட்டும் தான் : அஜின்க்யா ரஹானே

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய கொல்கத்தா அணியானது மும்பை இந்தியன்ஸ் அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 16.2 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 116 ரன்களை மட்டுமே குவித்தனர். கொல்கத்தா அணி சார்பாக அதிகபட்சமாக ரகுவன்சி 26 ரன்களையும், ரமன்தீப் சிங் 22 ரன்களையும் குவித்தனர்.

- Advertisement -

மும்பை அணி சார்பாக அறிமுக வீரர் அஸ்வனி குமார் 4 விக்கெட்டுகளையும், தீபக் சாகர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். பின்னர் 117 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியானது 12.5 ஓவர்களிலேயே வெறும் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 121 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது மும்பை அணி சார்பாக ரயான் ரிக்கல்டன் 62 ரன்களையும், சூரியகுமார் யாதவ் 27 ரன்களையும் குவித்து ஆட்டமிழக்காமல் அந்த அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.

இந்நிலையில் இந்த போட்டியில் அடைந்த தோல்வி குறித்து பேசிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் அஜின்க்யா ரஹானே கூறுகையில் : மொத்தமாக இந்த போட்டியில் எங்களது பேட்ஸ்மேன்கள் மிகப்பெரிய சொதப்பலை சந்தித்துள்ளனர். இந்த மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்ததால் 180 முதல் 190 ரன்கள் வரை அடித்திருந்தால் அது வெற்றிக்கு போதுமான இலக்காக இருந்திருக்கும் என்று நினைத்தோம்.

- Advertisement -

இந்த மைதானத்தில் நல்ல பவுன்சும், வேகமும் இருந்ததால் நிச்சயம் பேட்டிங்-குக்கு சாதகமான ஆடுகளமாகவே இருந்தது. ஆனாலும் நாங்கள் அடுத்தடுத்து விக்கெட்டை இழக்கவே பெரிய ரன் குவிப்பிற்கு செல்ல முடியாமல் போய்விட்டது. அதிலும் குறிப்பாக பவர்பிளே ஓவர்களிலேயே 4 விக்கெட்டுகளை இழந்ததால் அதிலிருந்து மீண்டு வருவது கடினமாக மாறியது. எங்களது அணியின் பந்துவீச்சாளர்கள் இந்த இலக்கை வைத்து எவ்வளவோ போராடினார்கள்.

இதையும் படிங்க : அவங்க தான் அஸ்வனி, புதூர் மாதிரி வீரர்களை இந்தியா முழுக்க போய் தேடி கொடுக்குறாங்க.. பாண்டியா பேட்டி

ஆனாலும் இலக்கு போதுமானதாக இல்லாததால் அவர்களாலும் எதுவும் செய்ய முடியாமல் போனது. இருந்தாலும் பந்துவீச்சாளர்கள் தங்களது முழு உழைப்பையும் வெளிப்படுத்தினர். இந்த போட்டியின் தோல்விக்கு பேட்ஸ்மன்களின் மோசமான ஆட்டமே காரணம் என அஜின்க்யா ரஹானே கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement