Rahane : இந்த போட்டியின் தோல்விக்கு யார்மீதும் குறைகூற விரும்பவில்லை – ரஹானே விளக்கம்

ஐ.பி.எல் தொடரின் 53 ஆவது போட்டி இன்று மாலை 4 மணிக்கு டெல்லி மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி அணியும், ரஹானே தலைமையிலான ராஜஸ்தான்

Rahane
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 53 ஆவது போட்டி இன்று மாலை 4 மணிக்கு டெல்லி மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி அணியும், ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் அணியும் மோதின.

Rahane

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வுசெய்தது. அதன்படி முதலில் விளையாடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 115 ரன்களை அடித்தது. அனைத்து வீரர்களும் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழக்க அதிகபட்சமாக ரியான் பராக் 50 ரன்களை அடித்தார்.

தொடர்ந்து 116 ரன்களை இலக்காக கொண்டு விளையாடிய டெல்லி அணி 16.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 121 ரன்களை அடித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ரிஷப் பண்ட் ஆட்டமிழக்காமல் 38 பந்துகளில் 53 ரன்கள் அடித்தார். ஆட்டநாயகன் விருதினை அமித் மிஸ்ரா பெற்றார்.

Ishanth

போட்டி முடிந்து தல்வி குறித்து பேசிய ரஹானே கூறியதாவது : இந்த வருட ஐ.பி.எல் தொடர் எங்களுக்கு கடினமான ஒன்றாகும். இந்த போட்டியின் தோல்வி குறித்து யார் மீதும் குறைகூற விரும்பவில்லை. இப்போதுதான் நிறைய வீரர்கள் நன்றாக ஆடத்துவங்கினர். ரியான் பராக் இந்த தொடரில் அருமையாக ஆடினார். ஷ்ரேயாஸ் கோபால் இந்த அதிடரில் அருமையாக ஆடினார்.

Riyan 1

இந்த போட்டியில் 145-150 ரன்கள் வரை அடித்திருந்தால் போட்டி சவாலான போட்டியாக இருந்திருக்கும். இந்த தொடரில் உள்ள குறைகளை களைந்து அடுத்த வருட தொடரில் சிறப்பாக திரும்பி வருவோம் என்று ரஹானே கூறினார்.

Advertisement