- Advertisement -
இந்திய கிரிக்கெட்

அஸ்வினா ? ஜடேஜாவா? ஆடப் போவது யாரு கூறிய பதில் இதுதான்! – விவரம் இதோ

நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் ஆடுவாரா இல்லை ஜடேஜா ஆடுவாரா என்பது குறித்து இந்திய அணியின் துணை கேப்டன் ரஹானே கருத்து ஒன்றினை தெரிவித்துள்ளார் . இதுகுறித்து அவர் கூறியதாவது :

இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததற்கு காரணம் இந்திய அணி பேட்டிங்கில் சொதப்பியதே ஆகும். இந்த நிலையில் 2-வது டெஸ்ட் போட்டி 29ஆம் தேதி துவங்குகிறது. இதற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய ரஹானே கூறியதாவது :

- Advertisement -

முதல் டெஸ்டில் செய்த தவறுகளை இரண்டாவது டெஸ்டில் சரி செய்ய காத்திருக்கிறோம் . டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் ஒவ்வொரு போட்டியும் முக்கியமானது. ஒரு டெஸ்டில் வென்றாலே 60 புள்ளிகள் கிடைக்கும். அதனை வைத்து இந்திய அணி இன்னும் முன்னேறலாம். இரண்டாவது டெஸ்டில் தற்போது கவனம் செலுத்துவோம்.

அஸ்வின் ஜடேஜா ஆகிய இருவரில் யார் ஆடுவார் ஆடுவார்கள். என்று கேட்கிறீர்கள் இது குறித்து கேப்டன்தான் முடிவு செய்வார் .இருவருமே நல்ல பந்து வீச்சாளர்கள் . ஆடுகளத்துக்கு ஏற்றாற்போல் இருவரில் யாரை ஆட வைப்பது என்று முடிவு செய்வோம் இவ்வாறு கூறியுள்ளார் ரஹானே.

- Advertisement -
Published by