யாருக்கும் நான் என்னை புரூப் பண்ணனும்னு அவசியமில்லை. மீண்டும் அணியில் இடம்பிடிப்பேன் – சவால் விட்ட இந்திய வீரர்

Ind
- Advertisement -

இந்திய அணிக்காக கடந்த 2011ம் ஆண்டு அறிமுகமானவர் அஜின்கியா ரஹானே. தோனியின் தலைமையில் அனைத்து விதமான போட்டிகளிலும் அறிமுகமாகி ஐந்து வருடங்களுக்கு மேலாக நிலைத்து நின்று ஆடினார். 65 டெஸ்ட் போட்டிகளிலும், 90 ஒருநாள் போட்டிகளிலும் 20 டி20 போட்டிகளில் ஆடி 7,400 ரன்கள் குவித்துள்ளார். ஆனால் விராட் கோலி தலைமை ஏற்ற பின்னர் இவருக்கும் அணியில் இடம் கிடைக்கவில்லை.

- Advertisement -

டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ஆடி வருகிறார். குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில் வெளிநாடுகளில் ஆடுவதில் வல்லவர். இந்நிலையில் மீண்டும் ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியில் இடம்பிடிக்க வேண்டும் என்று ஏற்கனவே தனது விருப்பத்தை தெரிவித்திருந்தார். முன்னதாக நான்காம் வரிசையில் ஆடிக்கொண்டிருந்தார். 2018 ஆம் ஆண்டு திடீரென ஓரம் ஓரம் கட்டப்பட்டார் தற்போது இதில் பேசியுள்ளார் அஜின்கியா ரஹானே.

ஒருநாள் போட்டிகளில் மீண்டும் நான் ஆட வேண்டும் என்பதுதான் முதல் திட்டமாக இருக்கிறது. என்னுடைய புள்ளி விவரங்கள் பற்றி எல்லாம் பேசுவதில்லை நான் ஒருநாள் அணியில் இருந்து ஓரம்கட்ட படுவதற்கு முன்னர் மூன்று ஆண்டுகள் நன்றாக ஆடிக் கொண்டிருந்தேன்.துவக்க வீரராக, நான்காம் வரிசையில் எனது புள்ளிவிவரம் நன்றாகவே இருக்கிறது.

இதன் காரணமாக ஒரு நாள் நிலைக்குத் திரும்ப வேண்டும் என்பதுதான் எனது திட்டம். அந்த வாய்ப்பு எப்போது வரும் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் அதற்காக கடுமையாக உழைத்து வருகிறேன் என் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது.

Rahane

ஆனால் அதனை யாரிடமும் நான் நிரூபிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்று தெரிவித்துள்ளார் அஜின்கியா ரஹானே. ரஹானே ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடவில்லை என்றாலும் டெஸ்ட் அணியில் துணைக்கேப்டனாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement