RR vs CSK : இன்னும் இவ்வளவு ரன்கள் அடித்திருந்தால் வெற்றிதான். தோல்விக்கு இதுவே காரணம் – ரஹானே வேதனை

ஐ.பி.எல் தொடரின் 25 ஆவது போட்டி ஜெய்ப்பூரில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணியும், ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் அணியும் மோதின

Rahane
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 25 ஆவது போட்டி ஜெய்ப்பூரில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணியும், ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் அணியும் மோதின.

rahane

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் குவித்தது. ராஜஸ்தான் அணி சார்பாக பென் ஸ்டோக்ஸ் அதிகபட்சமாக 38 ரன்களை குவித்தார். பட்லர் 23 ரன்களை குவித்தார்.

பிறகு 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னை அணி சார்பில் அதிகபட்சமாக தோனி 58 ரன்கள் குவித்தார். ராயுடு 57 ரன்கள் குவித்தார். கடைசி பந்தில் 3 ரன்கள் தேவைபட்ட நிலையில் சான்ட்னர் சிக்ஸ் அடித்து அணியை வெற்றிபெற வைத்தது குறிப்பிடத்தக்கது.

Rayudu

போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய ரஹானே கூறியதாவது : இந்த மைதானத்தில் நாங்கள் அடித்த 151 ரன்கள் போதாது. 170 ரன்கள் வரை நாங்கள் அடித்திருந்தால் வெற்றி எங்கள் பக்கம் இருந்திருக்கும். எங்களது பவுலர்கள் சிறப்பாக பந்துவீசினார்கள். பேட்டிங்கில் சற்று முன்னேற்றம் தேவை என்றே நினைக்கிறன், மிடில் ஓவர்களில் ரன்களை குவிக்கவில்லை.

Shreyas Gopal

பவர்பிளே ஓவர்களுக்குள் முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி போட்டியில் வெற்றிக்கான முனைப்பில் நாங்கள் விளையாடினோம். ஆனால், எதிர்பாரா விதமாக சூழ்நிலை எங்களுக்கு எதிராக அமைந்தது. கடந்த 4-5 போட்டிகளில் நாங்கள் செய்த தவறை புரிந்துகொண்டோம். வரும் போட்டிகளில் எதனை மறந்து வெற்றி பெறுவோம் என்று ரஹானே கூறினார்.

Advertisement