வேற எதுவும் கூற விரும்பவில்லை. தோல்விக்கு காரணம் இதுதான் – ரஹானே ஓபன் டாக்

Rahane
- Advertisement -

நேற்று இரவு 8 மணிக்கு சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி நடந்தது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சினை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 175 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக தோனி 46 பந்துகளில் 75 ரன்களை குவித்தார்.

rahane

- Advertisement -

அடுத்து 176 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய ராஜஸ்தான் அணியில் திரிபாதி மற்றும் ஸ்டோக்ஸ் தவிர மற்ற யாரும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பேட்டிங் செய்யவில்லை. ஒரு கட்டத்தில் வெற்றியை நோக்கி சென்ற ராஜஸ்தான் அணி கடைசி ஓவரில் பிராவோவின் அபாரமான பந்துவீச்சினால் 167 ரன்கள் மட்டுமே குவித்து 8 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. அதிரடியாக ஆடிய தோனி ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.

போட்டிக்கு பிறகு தோல்வி குறித்து பேசிய ரஹானே : இந்த தோல்வி மிகுந்த ஏமாற்றத்தினை அளிக்கிறது. முதல் 10 ஓவர்கள் வரை எங்கள் அணி சிறப்பாக துவங்கியது. கடைசி 5 ஓவர்களில் தோனி ஆட்டத்தினை மாற்றிவிட்டார். அவரைப்போன்ற பேட்ஸ்மேன் சிறப்பாக ஆடிக்கொண்டிருக்கும்போது பந்துவீச்சாளர்கள் பந்துவீச சற்று சிரமப்படுத்தான் ஆக வேண்டும். சென்னை அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசினார்கள்.

Dhoni

மேலும், எங்கள் அணி மூன்று போட்டிகளிலும் சிறப்பாகவே ஆடிவருகிறது. அதிர்ஷ்டவசமின்றி தோல்விகளை பெற்றுவருகிறோம். மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்புவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. எங்கள் அணியின் பேட்ஸ்மேன்கள் இனி சிறப்பாக ஆடி வெற்றிக்கு கைகொடுக்க வேண்டும் என்பது நினைத்து செயல்பட வேண்டும் என்று ரஹானே தெரிவித்தார்.

Advertisement