கங்குலியின் வார்த்தையை தவறாமல் காப்பாற்றிய ரஹானே – இலங்கை டெஸ்ட் தொடரில் இடம் உறுதி

- Advertisement -

இந்தியாவின் பிரபல உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பை 2021/22 சீசன் நேற்று இந்தியா முழுவதும் பல்வேறு நகரங்களில் துவங்கியது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தொடர் கடந்த வருடம் ரத்து செய்யப்பட்ட நிலையில் இந்த வருடம் பல தடைகளை கடந்து லீக் மற்றும் நாக் அவுட் சுற்று என 2 பாகங்களாக நடைபெற உள்ளது. த்தம் இந்தியாவின் அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த 38 அணிகள் பங்குபெறும் இந்த தொடரில் லீக் மற்றும் நாக்-அவுட் சுற்றுகள் என மொத்தம் 65 போட்டிகள் நடைபெற உள்ளன. பலரின் வாழ்வாதாரமாக விளங்கும் இத்தொடர் மீண்டும் நடைபெறுவதால் பல உள்ளூர் இந்திய கிரிக்கெட் வீரர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ranji

- Advertisement -

தடுமாறும் ரகானே:
பொதுவாகவே இந்திய சீனியர் கிரிக்கெட்டில் ரன்கள் குவிக்க தடுமாறி மோசமான பார்மில் திணறும் கிரிக்கெட் வீரர்கள் இந்த ரஞ்சி கோப்பையில் விளையாடி இழந்த தங்களது பார்மை மீட்டெடுத்து மீண்டும் இந்திய கிரிக்கெட்டில் வெற்றிகரமாக விளையாடுவார்கள். குறிப்பாக முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, விவிஎஸ் லக்ஷ்மன் போன்ற பல ஜாம்பவான்கள் இந்தியாவுக்காக விளையாட தடுமாறிய போது இந்த ரஞ்சி கோப்பையில் விளையாடி அதன் வாயிலாக இந்திய கிரிக்கெட் அணியில் மீண்டும் விளையாடிய வரலாறு உள்ளது.

அந்த வகையில் தற்போதைய இந்திய டெஸ்ட் அணியில் சீனியர் வீரராக கருதப்படும் அஜிங்கிய ரஹானே கடந்த 2020க்கு பின் ஒரு சதம் கூட அடிக்க முடியாமல் படுமோசமான பார்மில் இருந்து வருகிறார். குறிப்பாக கடந்த மாதம் தென்ஆப்பிரிக்காவில் நடந்த டெஸ்ட் தொடரில் 3 போட்டிகளிலும் சொதப்பியதால் இந்தியா படுதோல்வியை சந்தித்தது மட்டுமல்லாமல் உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் அணி என்ற அந்தஸ்தையும் இழந்தது.

Rahane-1

கடைசி வாய்ப்பு:
இதன் காரணமாக கடுப்பான இந்திய அணி நிர்வாகம் அவரை இந்திய அணியில் இருந்து கழற்றி விட முடிவு செய்துள்ளது. அப்படிப்பட்ட வேளையில் ரஞ்சி கோப்பையில் ரன்கள் அடித்தால் மட்டுமே இந்திய அணியில் இனி வாய்ப்பு கிடைக்கும் என பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி கடந்த சில வாரங்களுக்கு முன் வெளிப்படையாக தெரிவித்திருந்தார். அதனால் விரைவில் துவங்க இருக்கும் இலங்கை டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் ரகானேவின் இடம் கேள்விக்குறியாக மாறியது.

- Advertisement -

ஏற்கனவே ஒருநாள், டி20 இந்திய அணியில் அவருக்கு வாய்ப்பு கிடைக்காத நிலையில் மோசமான பார்ம் காரணமாக டெஸ்ட் அணியிலும் வெளியே தள்ளப்படும் பரிதாப நிலைக்கு அவர் தள்ளப்பட்டுள்ளார். இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் நேற்று துவங்கிய ரஞ்சி கோப்பையில் சௌராஷ்ட்ரா அணிக்கு எதிராக நடந்த முதல் போட்டியில் மும்பை அணியில் அஜிங்கிய ரகானே விளையாடினார்.

Rahane-4

அபார சதம்:
முதலும் கடைசியாக கிடைத்த இந்த வாய்ப்பை இறுக்கமாக பிடித்துக்கொண்ட ரகானே 22/2 என மோசமான தொடக்கம் பெற்ற மும்பைக்கு நிதானமாகவும் பொறுமையாகவும் நங்கூரமாக பேட்டிங் செய்ய துவங்கினார். தொடர்ந்து அபாரமாக பேட்டிங் செய்த அவர் நேற்றைய முதல் நாளில் சதம் விளாசி அசத்தினார். அதை தொடர்ந்து இன்று நடந்த 2வது நாளிலும் சிறப்பாக பேட்டிங் செய்த அவர் 249 பந்துகளில் 15 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் உட்பட 129 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

மொத்தத்தில் இந்திய அணியில் விளையாடுவதற்கு கடைசியாக கிடைத்த பொன்னான வாய்ப்பை கச்சிதமாக பயன்படுத்திய ரகானே இந்திய தேர்வு குழுவினரை திரும்பி பார்க்க வைத்துள்ளார். வரும் பிப்ரவரி 24ஆம் தேதி இலங்கைக்கு எதிராக இந்தியா பங்குபெறும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மொஹாலியில் தொடங்க உள்ளது. அதற்கான இந்திய அணி இன்னும் ஒருசில தினங்களில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் மோசமான பார்மில் இருக்கும் அஜிங்கிய ரஹானே சதம் அடித்துள்ளதால் இந்திய டெஸ்ட் அணியில் மீண்டும் விளையாடும் வாய்ப்பு கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது என்றே கூறலாம்.

இதையும் படிங்க : ரஞ்சி கோப்பை அறிமுகப்போட்டியிலேயே முச்சதம் அடித்து வரலாறு படைத்த இளம்வீரர் – யார் இவர்?

இருப்பினும் ஷ்ரேயஸ் ஐயர், சூரியகுமார் யாதவ் போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க இந்திய அணி நிர்வாகம் முடிவு எடுத்துவிட்டதால் அவரின் பெயர் இலங்கை டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெறுமா என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Advertisement