ரஞ்சி கோப்பை அறிமுகப்போட்டியிலேயே முச்சதம் அடித்து வரலாறு படைத்த இளம்வீரர் – யார் இவர்?

Sakibul-Gani
- Advertisement -

இந்தியாவில் தற்போது இந்திய கிரிக்கெட் நிர்வாகத்தின் சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரானது துவங்கியுள்ளது. நேற்று துவங்கிய இந்த மிகப்பெரிய தொடரானது அடுத்து ஜூன் 26ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடரில் இந்தியா முழுவதிலும் இருந்து 38 அணிகள் பங்கேற்று விளையாடுகின்றன. கொரோனா பாதிப்பு காரணமாக தள்ளிவைக்க பட்டிருந்த இந்தத்தொடரானது தற்போது ஒருவழியாக துவங்கியுள்ளது.

ranji

- Advertisement -

நேற்று துவங்கிய இந்த ரஞ்சி தொடரில் இந்திய அணியின் வீரரான ரஹானே மற்றும் அண்டர் 19 கேப்டன் யாஷ் துள் மற்றும் சர்பராஸ் கான் ஆகியோர் முதல் நாள் ஆட்டத்திலேயே தாங்கள் விளையாடிய அணிகளுக்காக சதமடித்து அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தனர்.

இந்நிலையில் பீகார் மற்றும் மிசோரம் ஆகிய அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் ஒரு ரஞ்சிப் போட்டியில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளம் வீரரான சகிபுல் கனி என்பவர் தனது அறிமுக போட்டியிலேயே முச்சதம் அடித்து அசத்தியுள்ளார்.

gani 1

இதுவரை ரஞ்சி கிரிக்கெட் வரலாற்றில் யாரும் அறிமுகப் போட்டியில் முச்சதம் அடித்ததில்லை என்பதன் காரணமாக தனது அறிமுக போட்டியிலேயே மாபெரும் சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார். 22 வயதான சகிபுல் கனி வலது கை ஆட்டக்காரர் என்பதும் அவர் நான்காவது இடத்தில் இறங்குகிறார் என்பதும் கூடுதல் சிறப்பம்சம்.

- Advertisement -

அதன்படி நேற்று இந்த போட்டியில் 404 பந்துகளைச் சந்தித்த அவர் 56 பவுண்டரிகள் 6 சிக்சர்கள் என 341 ரன்கள் குவித்துள்ளார். இவருக்கு முன்னதாக 2018-19 ஆம் ஆண்டு நடைபெற்ற ரஞ்சிப் போட்டியில் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த அஜய் ரொஹிரா என்பவர் தனது அறிமுக போட்டியில் 267 ரன்கள் அடித்தது இதுவரை தனிநபர் அடித்த அதிகபட்ச ரன்களாக இருந்தது.

இதையும் படிங்க : என் பையன் கிரிக்கெட் விளையாடி இதுவரை நான் நேரில் பார்த்ததில்லை – சச்சின் சொன்ன காரணம்

அந்த சாதனையை தற்போது பீஹார் மாநிலத்தை சேர்ந்த 22 வயது இளம்வீரரான சகிபுல் கனி முறியடித்துள்ளது அனைவரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது.

Advertisement