ரஹானேவை நம்பி ஓடலாம் ஒன்னும் ஆகாது. வித்தியாசமான சாதனை படைத்த ரஹானே – விவரம் இதோ

- Advertisement -

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி தற்போது ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் தென்னாபிரிக்க அணி வழக்கம்போல இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தற்போது மூன்றாம் நாள் முடிவில் இரண்டாவது இன்னிங்சில் 132 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்து வருகிறது.

Umesh 3

- Advertisement -

இந்நிலையில் இந்தப் போட்டியில் இந்திய அணியின் துணை கேப்டனாக ரஹானே டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் விசித்திரமான ஒரு சாதனையை படைத்துள்ளார். அதன்படி நேற்று ரோகித் சர்மாவுடன் சேர்ந்து அமைத்த கூட்டணியோடு சேர்த்து ரஹானே இதுவரை 200 ஒருமுறை டெஸ்ட் கிரிக்கெட்டில் பார்ட்னர்ஷிப் அமைத்து ரன்அவுட் ஆகாமல் இருந்துள்ளார்.

இப்படி டெஸ்ட் அரங்கில் ஒரு வீரர் 200 முறைக்கு மேல் பாட்னர்ஷிப் அமைத்து ஒரு முறை கூட ரன்அவுட் ஆகாத முதல் வீரர் என்ற வரலாற்று சாதனை படைத்தார். இதில் தன்னுடன் பார்ட்னராக இருந்த எந்த வீரரையும் இதுவரை ரஹானே ரன்அவுட் ஆகியதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னால் 4 வீரர்கள் மட்டுமே 100 இன்னிங்ஸ்களில் ரன்அவுட் அவுட்டாகாமல் இருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி சார்பாக அதிகமுறை டெஸ்ட் போட்டிகளில் ரன்அவுட் ஆகிய வீரர் என்ற சாதனையை டிராவிட் (12 முறை) வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement