2025-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது எதிர்வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் துவங்கி நடைபெற உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது. கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற இருக்கும் இந்த போட்டிக்காக தயாராகும் வகையில் தற்போது இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.
ரஹானே மற்றும் ஷ்ரேயாஸ் நிகழ்த்த இருக்கும் சாதனை – விவரம் இதோ
கடந்த ஆண்டு நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரை தொடர்ந்து 10 அணிகளில் இருந்த வீரர்களும் கலைக்கப்பட்டு மெகா ஏலம் நடத்தப்பட்டதால் அனைத்து அணிகளிலும் வீரர்களின் அணி மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த 2025 ஐபிஎல் தொடரை எந்த அணி கைப்பற்றும்? என்பது குறித்த எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. அதோடு கோப்பையை கைப்பற்றப்போகும் அணி குறித்த கருத்துக்களையும் முன்னாள் வீரர்கள் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த 2025-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியின் கேப்டனாக விளையாட இருக்கும் ரஹானேவும், பஞ்சாப் அணியின் கேப்டனாக விளையாட இருக்கும் ஷ்ரேயாஸ் ஐயரும் ஒரு வித்தியாசமான சாதனையை நிகழ்த்த காத்திருக்கின்றனர். அப்படி அவர்கள் இருவரும் படைக்கப் போகும் சாதனை யாதெனில் : அஜின்க்யா ரஹானே ஏற்கனவே 2017-ஆம் ஆண்டு புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்காக விளையாடி இருந்த போது ஒரு போட்டியில் கேப்டனாக செயல்பட்டிருந்தார்.
பின்னர் 2018 ஆம் ஆண்டு முதல் ராஜஸ்தான் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த அவர் அந்த அணியில் இருந்து வெளியேறி சென்னை, டெல்லி ஆகிய அணிகளும் விளையாடியிருந்தார். ஆனால் அந்த இரண்டு அணியிலும் அவருக்கு கேப்டன் பதவி தரப்படவில்லை. இந்நிலையில் தற்போது 2025 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ள அவருக்கு அனுபவ வீரர் என்ற அடிப்படையில் கேப்டன்சி வழங்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக ஐபிஎல் வரலாற்றில் மூன்று வெவ்வேறு அணிகளுக்கு கேப்டனாக செயல்பட்ட முதல் வீரர் என்ற சாதனையை அஜிங்க்ய ரஹானே நிகழ்த்த இருக்கிறார். அதேபோன்று மற்றொரு நட்சத்திர வீரரான ஷ்ரேயாஸ் ஐயர் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை டெல்லி அணியை வழிநடத்தினார். அதன் பின்னர் 2022 முதல் 2024 வரை கொல்கத்தா அணியை வழி நடத்தினார்.
இதையும் படிங்க : 91க்கு அவுட்.. வெந்த புண்ணில் வேலை பாய்ச்சிய நியூஸிலாந்து.. பாகிஸ்தான் 9 வருட மோசமான சாதனை தோல்வி
தற்போது இந்த ஆண்டு கொல்கத்தா அணியில் இருந்து வெளியேறியுள்ள அவர் பஞ்சாப் அணியை வழிநடத்து இருப்பதால் அவரும் மூன்று வெவ்வேறு ஐபிஎல் அணிகளுக்கு கேப்டனாக செயல்பட்ட இரண்டாவது வீரர் என்ற சாதனை நிகழ்த்த இருப்பது0 குறிப்பிடத்தக்கது.



