நான் ஏன் கொடுக்கனும்.. கேன் வில்லியம்சன் பற்றிய கேள்விக்கு ரச்சின் ரவீந்திராவின் பதிலால்.. ரசிகர்கள் அதிருப்தி

Rachin Ravindra 2
- Advertisement -

தென்னாபிரிக்காவுக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் நடைபெறும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து 281 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. பிப்ரவரி நான்காம் தேதி மவுண்ட் மௌங்கனி நகரில் துவங்கிய அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூஸிலாந்து 511 ரன்கள் குவித்து ஆரம்பத்திலேயே வெற்றியை உறுதி செய்தது.

அந்த அணிக்கு அதிகபட்சமாக கேன் வில்லியம்சன் 118, ரச்சின் ரவீந்திரா 240 ரன்கள் எடுக்க தென்னாப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக கேப்டன் நெய்ல் பிராண்ட் 6 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத்தொடர்ந்து விளையாடிய தென்னாப்பிரிக்கா சுமாரான பேட்டிங் செய்து 162 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக கீகன் பீட்டர்சன் 45 ரன்கள் எடுக்க நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக மிட்சேல் சான்ட்னார் 3, மாட் ஹென்றி 3 விக்கெட்டுகள் எடுத்தனர்.

- Advertisement -

எதுக்கு கொடுக்கணும்:
அதன் பின் 349 ரன்கள் முன்னிலையுடன் விளையாடிய நியூசிலாந்து 179/4 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அதிகபட்சமாக மீண்டும் கேன் வில்லியம்சன் சதமடித்து 109 ரன்கள் எடுக்க தென்னாபிரிக்கா சார்பில் அதிகபட்சமாக நெய்ல் பிராண்ட் 2 விக்கெட்கள் எடுத்தார். இறுதியில் 529 ரன்களை சேசிங் செய்த தென்னாபிரிக்கா 247 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வியை சந்தித்தது. அதிகபட்சமாக டேவிட் பேடிங்கம் 87 ரன்கள் எடுக்க நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக கெயில் ஜமிஷன் 4 விக்கெட்கள் சாய்த்தார்.

அந்த வகையில் இளம் வீரர்களுடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்காவை எளிதாக தோற்கடித்த நியூசிலாந்து 1 – 0* (2) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. இந்த வெற்றிக்கு 240 ரன்கள் அடித்து முக்கிய பங்காற்றிய இளம் வீரர் ரச்சின் ரவீந்திரா ஆட்டநாயகன் விருதை வென்றார். அந்த நிலையில் உங்களுக்கு நிகராக இப்போட்டியில் 2 சதங்கள் அடித்த கேன் வில்லியம்சனுடன் ஆட்டநாயகன் விருதை பகிர்ந்து கொள்வீர்களா? என்று ரச்சின் ரவீந்தராவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

- Advertisement -

அதற்கு நான் ஏன் கொடுக்கணும் என்ற வகையில் முடியாது என மறுப்பு தெரிவித்த அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “4 – 5 நாட்கள் நின்று வேலையைச் கடினமான வேலையை செய்து நம்முடைய திறனுக்கு தகுந்தாற்போல் அணியின் வெற்றியில் பங்காற்றுவது நல்ல உணர்வை கொடுக்கிறது. நான் இந்த இன்னிங்ஸை உயரியதாக மதிப்பிடுவேன். ஏனெனில் வெற்றிக்காக நாங்கள் அங்கே கடினமான பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடினோம்”

இதையும் படிங்க: ரிஷப் பண்ட் கம்பேக்கில் நீங்க நினைக்கிறது நடக்கும்ன்னு சொல்ல முடியாது.. ரிக்கி பாண்டிங் தகவல்

“கண்டிப்பாக இல்லை (ஆட்டநாயக்கன் விருது பற்றி). அவர் 31 சதங்கள் அடித்துள்ளார். எனவே ஒரு சதம் மட்டுமே அடித்துள்ள நான் அதை அவருக்கு கொடுக்கப் போவதில்லை. எந்த நேரத்திலும் அணியின் வெற்றியில் பங்காற்றுவது எப்போதுமே ஸ்பெஷலாகும்” என்று கூறினார். இருப்பினும் பெயருக்காக கூட ஜாம்பவானாக கருதப்படும் வில்லியம்சனுடன் விருதை பகிர்ந்து கொள்வேன் என்று அவர் சொல்லாதது ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement