ரிஷப் பண்ட் கம்பேக்கில் நீங்க நினைக்கிறது நடக்கும்ன்னு சொல்ல முடியாது.. ரிக்கி பாண்டிங் தகவல்

Ricky Ponting
- Advertisement -

இந்திய கிரிக்கெட் வீரர் ரிசப் பண்ட் கடந்த 2022 டிசம்பர் மாதம் சந்தித்த கார் விபத்திலிருந்து குணமடைந்து வருகிறார். ஜாம்பவான் தோனியை மிஞ்சும் அளவுக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா போன்ற வெளிநாடுகளில் சதமடித்த முதல் ஆசிய விக்கெட் கீப்பராக சாதனை படைத்த அவர் இந்தியாவுக்கு காபா போன்ற சில மகத்தான வெற்றிகள் பெற்றுக் கொடுத்துள்ளார்.

அந்த வரிசையில் அவர் இல்லாதது 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை ஃபைனல் முதல் நடைபெற்று வரும் இங்கிலாந்து தொடர் வரை இந்திய அணிக்கு பின்னடைவாகவே இருந்து வருகிறது. இருப்பினும் தற்போது குணமடைந்து பயிற்சிகளை மேற்கொள்ள துவங்கியுள்ள அவர் 2024 ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் கேப்டனாக களமிறங்கி கம்பேக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

பாண்டிங் தகவல்:
ஒருவேளை அதில் நன்றாக விளையாடும் பட்சத்தில் 2024 டி20 உலகக் கோப்பையிலிருந்து இந்திய அணிக்காகவும் அவர் தொடர்ந்து விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக விளையாடுவார் என்று நம்பப்படுகிறது. இந்நிலையில் ரசிகர்கள் நினைப்பது போல ரிஷப் பண்ட் 2024 ஐபிஎல் தொடரில் விக்கெட் கீப்பராக அல்லது கேப்டனாக டெல்லி அணிக்காக முழுமையாக விளையாடுவது சந்தேகம் என்று அதன் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “நாம் கண்டிப்பாக விளையாடுவோம் என்பதில் ரிஷப் தன்னம்பிக்கையுடன் உள்ளார். இருப்பினும் எந்தத் திறனில் அவர் விளையாடுவார் என்பது எங்களுக்கு உறுதியாக தெரியாது. அவர் பயிற்சி செய்து ஓடுவதை நாங்கள் சமூக வலைதளங்களில் பார்த்தோம். ஆனால் ஐபிஎல் தொடரின் முதல் போட்டிக்கு இன்னும் 6 வாரங்கள் மட்டுமே இருக்கின்றன”

- Advertisement -

“எனவே இந்த வருடம் அவரை விக்கெட் கீப்பராக விளையாட வைக்க முடியும் என்று எங்களால் உறுதியாக சொல்ல முடியாது. அவரிடம் நீங்கள் கேட்டால் கண்டிப்பாக நான் அனைத்து போட்டிகளிலும் கீப்பிங் செய்து நான்காவது இடத்தில் விளையாடுவேன் என்று சொல்வார் என உங்களிடம் என்னால் கேரண்டியாக சொல்ல முடியும். அதைத் தான் அவர் விரும்புவார்”

இதையும் படிங்க: டைமிங்ல கிடைக்கும் அந்த வாய்ப்பை பயன்படுத்துங்க.. திணறும் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு கவாஸ்கர் அறிவுரை

“அவர் பல்வேறு பரிணாமங்களை கொண்ட வீரர். கடந்த வருடம் அவரை நாங்கள் தவற விட்டோம். கடந்த 12 – 13 மாதங்கள் கடினமான நேரங்களை சந்தித்த அவர் மீண்டும் வருவதற்கு அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும். எனவே மொத்தம் உள்ள 14 போட்டிகளில் அவரை 10 போட்டிகளில் விளையாட வைத்தால் கூட அது எங்களுக்கு போனஸாக அமையும்” என்று கூறினார். அவர் கூறுவது போல ரிஷப் பண்ட் தற்போது பேட்டிங் பயிற்சியை மட்டுமே துவங்கியுள்ளாரே தவிர இன்னும் பந்துக்கு பந்து குனிந்து நிமிர வேண்டிய கடினமான கீப்பிங் செய்ய ஆரம்பிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement