இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக சிஎஸ்கே அணியின் துவக்க வீரரான டேவான் கான்வேவுக்கு காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக அவருக்கு சரியான மாற்றுவீரர் யார்? என்பதை பார்த்து அதே அணியை சேர்ந்த இளம் வீரரான ரச்சின் ரவீந்திராவை சிஎஸ்கே அணி வாங்கியிருந்தது. அதன்படி சென்னை அணிக்காக வாங்கப்பட்ட அவர் இந்த தொடரில் 10 போட்டிகளில் விளையாடி ஒரு அரைசதத்துடன் 222 ரன்கள் குவித்துள்ளார்.
ரச்சின் ரவீந்திராவுக்கு உதவிய சி.எஸ்.கே :
நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரின் முதல் இரண்டு போட்டியில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் பின்னர் சற்று சுமாரான ஆட்டத்தையே வெளிப்படுத்தினார் இதன் காரணமாக அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன்னதாக அவரை சிஎஸ்கே அணி தக்க வைக்குமா? என்கிற சந்தேகம் இருந்து வருகிறது.
இருப்பிடம் அவரை சி.எஸ்.கே அணி விடுவித்தாலும் மெகா ஏலத்தின் போது குறைந்த தொகைக்கு மீண்டும் அவரை சென்னை அணி வாங்க முயற்சிக்கும் என்று தெரிகிறது. ஏனெனில் எப்போதுமே ஒரு வீரரின் மீது நம்பிக்கை வைத்து விட்டால் சிஎஸ்கே அணியின் நிர்வாகம் பெரிய அளவில் அவர்களுக்கு ஆதரவு தரும்.
அந்த வகையில் தற்போது ரச்சின் ரவீந்திராவுக்கு தனிப்பட்ட முறையில் சிஎஸ்கே அணியின் நிர்வாகம் செய்துள்ள உதவிதான் அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. ஏனெனில் ரச்சின் ரவீந்திரா ஐபிஎல் தொடருக்காக பயிற்சி செய்யாமல் தற்போது நியூசிலாந்து அணிக்காக விளையாட இருக்கும் போட்டிகளுக்காக சென்னை சிஎஸ்கே கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
ஏனெனில் நியூசிலாந்து அணியானது எதிர்வரும் சில மாதங்களில் இந்தியா, இலங்கை, ஆப்கானிஸ்தான் என அடுத்தடுத்த டெஸ்ட் தொடர்களில் விளையாட உள்ளது. இதன் காரணமாக நியூசிலாந்தில் பயிற்சி எடுப்பதை விட இந்திய ஆடுகளங்களில் பயிற்சி எடுத்தால் அது அடுத்தடுத்த தொடர்களுக்கு உதவும் என்று நினைத்த ரச்சின் ரவீந்திரா இதற்காக சிஎஸ்கே நிர்வாகத்திடம் அனுமதி கேட்டுள்ளார்.
இதையும் படிங்க : ஏங்கியே பழகிட்டேன்.. மேடையில் டிராவிட், ரோஹித்தை நேராக கலாய்த்த ஷமி.. நடந்தது என்ன?
பின்னர் சிஎஸ்கே நிர்வாகம் உடனடியாக அவருக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளது. இதன் காரணமாக தற்போது சென்னை வந்தடைந்து சிஎஸ்கே கிரிக்கெட் அகாடமியில் அவர் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். ஐபிஎல் தொடருக்காக மட்டுமின்றி சர்வதேச போட்டிகளிலும் தங்களது அணியை சேர்ந்த வீரர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று சிஎஸ்கே அணி நிர்வாகம் செய்த இந்த உதவி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.



