246.66 ஸ்ட்ரைக் ரேட்டில் வெளுத்து வாங்கிய ரச்சின் ரவீந்திரா.. சின்னத்தல ரெய்னாவின் 16 வருட சாதனையை உடைத்து மாஸ் அறிமுகம்

- Advertisement -

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் மார்ச் 22ஆம் தேதி ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடர் கோலாகலமாக துவங்கியது. நேற்று சேப்பாக்கத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் பெங்களூருவை 6 விக்கெட் வித்தியாசத்தில் நடப்புச் சாம்பியன் சென்னை தோற்கடித்தது. அதனால் புதிய கேப்டன் ருதுராஜ் தலைமையில் முதல் போட்டியிலேயே வெற்றி கண்ட சென்னை கோப்பையை தக்க வைக்கும் பயணத்தை வெற்றிகரமாக துவங்கியுள்ளது.

அந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு 20 ஓவரில் 173/6 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக அனுஜ் ராவத் 48 ரன்கள் எடுக்க சென்னை சார்பில் அதிகபட்சமாக முஸ்தபிசுர் ரஹ்மான் 4 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத்தொடர்ந்து 174 ரன்களை துரத்திய சென்னைக்கு ரச்சின் ரவீந்திரா 37, ரகானே 27, டேரில் மிட்சேல் 22 ரன்கள் எடுத்தனர்.

- Advertisement -

அசத்தல் அறிமுகம்:
அதை வீணடிக்காமல் மிடில் ஆர்டரில் சிவம் துபே 34*, ரவீந்திர ஜடேஜா 25* ரன்கள் எடுத்து 18.4 ஓவரிலேயே சேப்பாக்கத்தில் தொடர்ந்து 16வது வருடமாக 8வது போட்டியில் பெங்களூருவை வீழ்த்தி சென்னையை வெற்றி பெற வைத்தனர். அதனால் பெங்களூரு சார்பில் அதிகபட்சமாக கேமரூன் கிரீன் 2 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை.

முன்னதாக இந்த போட்டியில் நியூசிலாந்தை சேர்ந்த 24 வயது இளம் வீரர் ரச்சின் ரவீந்தரா சென்னை அணிக்காக அறிமுகமாக களமிறங்கினார். அந்த வாய்ப்பில் 3 பவுண்டரி 3 சிக்சரை தெறிக்க விட்டு 37 (15) ரன்களை 246.66 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் அடித்த அவர் ஐபிஎல் வரலாற்றில் தனது அறிமுகப் போட்டியிலேயே (குறைந்தபட்சம் 30 ரன்கள்) அதிக ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடிய வீரர் என்ற சுரேஷ் ரெய்னாவின் 16 வருட சாதனையை உடைத்து புதிய சாதனை படைத்துள்ளார்.

- Advertisement -

இதற்கு முன் கடந்த 2008ஆம் ஆண்டு மொஹாலியில் பஞ்சாப்புக்கு எதிராக சென்னை வரலாற்றின் தன்னுடைய முதல் போட்டியில் விளையாடியது. அந்தப் போட்டியில் அறிமுகமாக களமிறங்கிய சுரேஷ் ரெய்னா 2 பவுண்டரி 3 சிக்சருடன் 32 (13) ரன்களை 246.15 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் அடித்ததே முந்தைய சாதனையாகும். இது போக ஃபீல்டிங் துறையிலும் 2 அபாரமான கேட்ச்களை பிடித்த ரச்சின் அறிமுகப் போட்டியில் அசத்தினார் என்றே சொல்லலாம்.

இதையும் படிங்க: ஜெயிச்சது எல்லாம் ஓகே தான்.. ஆனா இந்த 2-3 விஷயத்துல ஒர்க் பண்ணனும் – கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் அதிரடி பேட்டி

கடந்த 2023 உலகக் கோப்பையில் 500க்கும் மேற்பட்ட ரன்கள் அடித்து சச்சின் டெண்டுல்கரின் சாதனையை உடைத்த அவர் சமீப காலங்களாகவே நியூஸிலாந்துக்கு சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அதன் காரணமாக சென்னை அணிக்காக வாங்கப்பட்ட அவர் தற்போது காயமடைந்த டேவோன் கான்வே இடத்தை நிரப்பும் அளவுக்கு அசத்தத் துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது

Advertisement