240 ரன்ஸ்.. 25 வருட வரலாற்றை உடைத்த ரச்சின் ரவீந்திரா.. புதிய தனித்துவ சாதனை.. வலுவான நிலையில் நியூசிலாந்து

Rachin Ravindra
- Advertisement -

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்கா 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அதில் ரபாடா போன்ற முதன்மை வீரர்கள் அனைவருமே எஸ்ஏ20 டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடுவதால் தென்னாபிரிக்க அணி நெய்ல் பிராண்ட் தலைமையில் இளம் வீரர்களுடன் களமிறங்கியுள்ளது. அந்த நிலைமையில் பிப்ரவரி 3ஆம் தேதி மவுண்ட் மவுங்கனியில் துவங்கிய முதல் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதை தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்துக்கு டாம் லாதம் 10, டேவோன் கான்வே 1 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். ஆனால் அடுத்ததாக ஜோடி சேர்ந்த கேன் வில்லியம்சன் மற்றும் இளம் வீரர் ரச்சின் ரவீந்திர ஆகியோர் தென் ஆப்பிரிக்க பவுலர்களை அபாரமாக எதிர்கொண்டு மூன்றாவது விக்கெட்டுக்கு 232 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் போட்டு நியூசிலாந்தை வலுப்படுத்தினர்.

- Advertisement -

தனித்துவ சாதனை:
அதில் கேன் வில்லியம்சன் 16 பவுண்டரியுடன் சதமடித்து 118 ரன்கள் குவித்து அவுட்டானார். அவருடன் விளையாடிய ரச்சின் ரவீந்தரா தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதமடித்தும் ஓயாமல் 26 பவுண்டரி 3 சிக்சருடன் இரட்டை சதமடித்து 240 ரன்கள் குவித்து அவுட்டானார். சொல்லப்போனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்த போட்டியில் தான் தன்னுடைய முதல் சதத்தை அடித்த அவர் அதை அப்படியே இரட்டை சதமாக மாற்றி 240 ரன்கள் குவித்துள்ளார்.

இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னுடைய முதல் சதத்தை இரட்டை சதமாக மாற்றி அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த நியூசிலாந்து வீரர் என்ற மாபெரும் தனித்துவமான சாதனையை ரச்சின் ரவீந்திரா படைத்துள்ளார். இதற்கு முன் கடந்த 25 வருடங்களுக்கு முன்பாக 1999ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக நியூசிலாந்து வீரர் மேத்யூ சின்க்ளையர் தன்னுடைய முதல் சதத்தை இரட்டை சதமாக அடித்து 214 ரன்கள் குவித்ததே முந்தைய அதிகபட்ச சாதனை ஸ்கோராகும்.

- Advertisement -

இது மட்டுமல்லாமல் டெஸ்ட் கிரிக்கெட்டில் இளம் வயதில் (24 வருடம் 47 நாட்கள்) சதமடித்த இரண்டாவது நியூசிலாந்து வீரர் என்ற சாதனையும் அவர் படைத்தார். அந்த வகையில் 2023 உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாடி 2023ஆம் ஆண்டின் வளர்ந்து வீரருக்கான ஐசிசி விருதை வென்ற அவர் இப்போட்டியில் அசத்தியதால் நியூசிலாந்து தங்களுடைய முதல் இன்னிங்ஸில் 511 ரன்கள் எடுத்தது.

இதையும் படிங்க: சச்சின், கோலி மாதிரி அதை செஞ்சு.. இந்திய அணியை காப்பாற்ற கத்துக்கோங்க.. அலெஸ்டர் குக் அட்வைஸ்

தென் ஆப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக கேப்டன் நெயில் பிராண்ட் 6 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத்தொடர்ந்து விளையாடி வரும் தென் ஆப்பிரிக்கா இரண்டாவது நாள் முடிவில் 80/4 என தடுமாறி வருவது குறிப்பிடத்தக்கது. அந்த அணிக்கு மூர் 23, கேப்டன் பிராண்ட் 4, வேன் டோண்டர் 0, ஹம்சா 22 ரன்களில் அவுட்டாக களத்தில் பேடிங்கம் 29*, கீகன் பீட்டர்சன் 2* ரன்களுடன் உள்ளனர்.

Advertisement