சச்சின், கோலி மாதிரி அதை செஞ்சு.. இந்திய அணியை காப்பாற்ற கத்துக்கோங்க.. அலெஸ்டர் குக் அட்வைஸ்

Alastair Cook
- Advertisement -

இந்தியாவுக்கு எதிராக நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் 28 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வென்றது. இருப்பினும் இரண்டாவது போட்டியில் 106 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா தக்க பதிலடி கொடுத்து ஐந்து போட்டிகள் கொண்ட இந்த தொடரை 1 – 1* என்ற கணக்கில் சமன் செய்துள்ளது.

முன்னதாக இத்தொடரில் இந்திய பேட்டிங் துறையில் ஸ்ரேயாஸ் ஐயர், சுப்மன் கில் ஆகியோர் சுமாராக விளையாடியதால் கடுமையான விமர்சனங்களை சந்தித்தனர். குறிப்பாக கடந்த சில வருடங்களாக ஐபிஎல் முதல் சர்வதேச வரை அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் அசத்திய சுப்மன் கில் ஜாம்பவான்கள் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி வரிசையில் இந்திய பேட்டிங் துறையின் அடுத்த சூப்பர்ஸ்டார் என்று சில முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றார்.

- Advertisement -

சீக்கிரம் கத்துக்கோங்க:
இருப்பினும் 2023 உலகக் கோப்பையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டதிலிருந்தே தடுமாறி வரும் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் கடைசி 18 இன்னிங்ஸில் ஒரு அரை சதம் கூட அடிக்காமல் தடுமாறினார். அதனால் அணியிலிருந்து நீக்குமாறு கடுமையான விமர்சனங்கள் எழுந்த நிலையில் இரண்டாவது போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இக்கட்டான சூழ்நிலையில் சதமடித்த கில் 104 ரன்கள் விளாசி இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றினர்.

அந்த வகையில் ஓரளவு ஃபார்முக்கு திரும்பியுள்ள அவர் தன்னுடைய தரத்தை நிரூபித்து விமர்சனங்களுக்கும் பதிலடி கொடுத்துள்ளார். இந்நிலையில் தரமான சுப்மன் கில் மிகப்பெரிய நாடான இந்தியாவில் நிலவும் விமர்சனங்களை சமாளித்து சச்சின், விராட் கோலி போல பேட்டிங் துறையை தோளில் சுமந்து வெற்றிகளை பெற்றுக் கொடுப்பதை கற்றுக் கொள்ள வேண்டுமென முன்னாள் இங்கிலாந்து கேப்டன் அலஸ்டர் குக் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “கில் அழகாக விளையாடினார். உண்மையான திறமையை கொண்டுள்ள அவருடைய தோளில் நிறைய அழுத்தம் இருக்கலாம். இந்தியாவில் நடந்த உலகக் கோப்பையில் அனைத்து விளம்பர பதாகைகளிலும் விராட் கோலியின் படம் இருந்தது. ஆனால் அவர் தான் அடுத்ததாக விராட் கோலியின் காலணியில் அடியெடுத்து வைக்க அனைவரும் விரும்புகிறார்கள். இந்தியாவின் அளவுள்ள ஒரு பெரிய நாட்டின் அழுத்தம் உங்கள் தோள்களில் இருப்பது பெரிய விஷயம்”

இதையும் படிங்க: நாங்க வேணும்னு செய்யல.. அது எங்க வேலையும் இல்ல.. சௌரவ் கங்குலிக்கு கோச் டிராவிட் பதில்

“ஒரு இளம் திறமைசாலியான அவர் இப்போது டெண்டுல்கர் மற்றும் கோலி போன்றவர்கள் கையாண்ட விஷயத்தை சமாளிக்க கற்றுக்கொள்ள வேண்டும். இந்த போட்டியில் விளையாடிய ஷாட்டுகள் அவர் எந்த அளவுக்கு திறமையானவர் என்பதை காண்பித்தது. அவரை இத்தொடரின் எஞ்சிய போட்டிகளிலும் நாம் பார்ப்போம். சுமாரான ஃபார்மில் பெரிய ரன்கள் அடிக்காமல் தடுமாறிய அவருக்கு ரோஹித் மற்றும் ராகுல் ஆதரவு கொடுத்தனர். அதை பயன்படுத்திய அவர் தற்போது தேர்வுக்குழுவினர் தம்மை புறக்கணிக்க முடியாத நிலையை ஏற்படுத்தியுள்ளார்” என்று கூறினார்.

Advertisement