வீடியோ : இந்த உலகக்கோப்பை தொடரில் 3-ஆவது ஹாட்ரிக்கை வீழ்த்திய ரபாடா – அதுல என்ன ஸ்பெஷல் தெரியுமா ?

Rabada

ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரானது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரில் பங்கேற்ற 12 அணிகளும் இரு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு விளையாடி வருகின்றன. இந்த இரண்டு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும் என்ற நிலையில் நேற்றைய முக்கியமான போட்டியில் இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் மோதின.

Rabada 1

இந்த போட்டியில் பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே தென்ஆப்பிரிக்க அணி அரையிறுதிக்கு முன்னேறும் என்ற நிலையில் நேற்றைய போட்டியில் முதலில் விளையாடிய தென்ஆப்பிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 189 ரன்களை குவித்தது. பின்னர் 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்களை குவித்து 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

- Advertisement -

இதன் மூலம் தென்னாப்பிரிக்க வெற்றி பெற்றாலும் ரன் ரேட் அடிப்படையில் அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை தவற விட்டது. இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறினர். இந்நிலையில் இந்த போட்டியில் விளையாடியதன் மூலம் தென் ஆப்பிரிக்க அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ரபாடா ஒரு மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by ICC T20 World Cup (@t20worldcup)

அந்த சாதனை யாதெனில் இந்த தொடரில் இதுவரை அயர்லாந்து வீரர் கேம்பர் மற்றும் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹசரங்கா ஆகியோர் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி இருந்த நிலையில் நேற்றைய போட்டியின் இறுதி ஓவரை வீசிய ரபாடா அந்த ஓவரின் முதல் 3 பந்துகளில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஹாட்ரிக் சாதனை படைத்தார். அதில் அவர் இங்கிலாந்து அணியின் கேப்டன் மோர்கன், வோக்ஸ், ஜோர்டான் ஆகியோரது விக்கெட்டை அடுத் தடுத்து வீழ்த்தி ஹாட்ரிக் சாதனை படைத்தார்.

- Advertisement -

இதையும் படிங்க : நேரலையில் கொந்தளித்த சீக்கா ஸ்ரீகாந்த் சார். முடிவை மாற்றிக்கொண்ட ஐ.சி.சி – ஒரு டீமையே காப்பாத்திட்டாரு

இதில் ஸ்பெஷல் என்னவெனில் கடைசி ஓவரில் ஹாட்ரிக் வீழ்த்தி அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் அவர் வெற்றிக்கும் அழைத்துச் சென்றார். அவர் எடுத்த இந்த ஹாட்ரிக் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த போட்டியில் 4 ஓவர்களை வீசிய அவர் 48 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

Advertisement