2016லயே தோனியிடம் ஒய்ட் பால் கேப்டன்சியை கேட்ட விராட் கோலியை அவர் தான் தடுத்தாரு – ஸ்ரீதர் திடுக்கிடும் தகவல்

MS dhoni r sridhar virat kohli
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் 3 விதமான உலகக் கோப்பைகளை வென்ற ஒரே கேப்டனாக சாதனை படைத்துள்ள எம்எஸ் தோனி 2010இல் இந்தியாவை தரவரிசையில் நம்பர் ஒன் டெஸ்ட் அணியாகவும் முன்னேற்றிய பெருமையைக் கொண்டவர். மிகச் சிறந்த விக்கெட் கீப்பர், அதிரடியான ஃபினிஷர் போன்ற நிறைய பரிணாமங்களை கொண்ட அவர் கேப்டனாக 2011 உலக கோப்பையை வென்றதும் வருங்காலத்தை கட்டமைப்பதற்காக நிறைய சீனியர் நட்சத்திர வீரர்களை கழற்றி விட்டு ரோகித் சர்மா, விராட் கோலி, ரெய்னா போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து அதற்காக விமர்சனங்களை வாங்கி கட்டிக் கொண்டார். அதே சமயம் 2012க்குப்பின் சச்சின், டிராவிட் போன்ற ஜாம்பவான்கள் ஓய்வு பெற துவங்கியதால் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது தலைமையில் இந்தியா அதள பாதாளத்தில் திண்டாடியது.

MS Dhoni Suresh Raina

- Advertisement -

அதற்கு முடிவு கட்டுவதற்கு காத்திருந்த தோனி கடந்த 2014இல் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் முதல் போட்டியில் காயமடைந்ததால் பங்கேற்காத போது 2 இன்னிங்ஸிலும் சதமடித்து இந்தியாவை வெற்றியின் விளிம்பு வரை அழைத்து வந்த விராட் கோலியின் கேப்டன்ஷிப் பார்த்து மிகவும் கவரப்பட்டார். அதனால் இவர் தான் அடுத்ததாக இந்தியாவை வழிநடத்த சரியானவர் என்ற முடிவெடுத்த தோனி தன்னுடைய வெள்ளை பந்து கிரிக்கெட் கேரியரை நீட்டிப்பதற்காகவும் அதே தொடரில் சிட்னியில் நடைபெற்ற போட்டியில் அனைவரும் சோகமாகும் வகையில் ஒட்டு மொத்தமாக டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து திடீரென ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

வெள்ளைப்பந்து கேப்டன்ஷிப்:
அதன் பின் 2015, 2016 உலகக் கோப்பைகளில் கேப்டனாக செயல்பட்ட அவர் 2017 ஜூன் மாதம் இங்கிலாந்து மண்ணில் நடைபெறும் சாம்பியன் டிராபியில் விராட் கோலி தலைமை தாங்குவதற்கு இதுவே சரியான தருணம் என்பதை கருத்தில் கொண்டு 2017 ஜனவரி மாதமே தம்முடைய வெள்ளை பந்து கேப்டன்சிப் பொறுப்பையும் அவரிடமே ஒப்படைத்து அவரது தலைமையில் சாதாரண வீரராக விளையாடினார். அவர் நினைத்திருந்தால் அந்த சமயத்தில் பிசிசிஐ ஆதரவுடன் கடைசி வரை கேப்டனாக செயல்பட்டிருக்க முடியும்.

Kohli

இருப்பினும் வருங்காலத்தை கருத்தில் கொண்டு வழிவிட்ட தோனியின் வெள்ளை பந்து கேப்டன்ஷிப் பொறுப்பை 2016லேயே விராட் கோலி கேட்டதாக முன்னாள் இந்திய பீல்டிங் பயிற்சியாளர் ஆர் ஸ்ரீதர் தற்போது திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளார். இருப்பினும் அந்த சமயத்தில் அணியின் இயக்குனராக இருந்த ரவி சாஸ்திரி விராட் கோலியை சமாதானப்படுத்தி அதை தடுத்ததாக தெரிவிக்கும் அவர் இது பற்றி தன்னுடைய சுயசரிதையான “கோச்சிங் பியாண்ட் – இந்திய கிரிக்கெட் அணியுடன் என்னுடைய நாட்கள்” என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளது பின்வருமாறு.

- Advertisement -

“2016இல் வெள்ளைப் பந்து கிரிக்கெட் கேப்டன்ஷிப் பொறுப்பையும் ஏற்பதில் விராட் கோலியிடம் தீவிர ஆர்வம் இருந்தது. அவர் கேப்டன் பதவியை தேடுவதை காட்டும் சில விஷயங்களை கூறினார். இருப்பினும் அந்த சமயத்தில் ஒருநாள் மாலையில் ரவி சாஸ்திரி அவரை அழைத்து “பாருங்கள் விராட். தோனி ஏற்கனவே உங்களிடம் டெஸ்ட் கேப்டன்ஷிப் பதவியை ஒப்படைத்துள்ளார். அதை முதலில் நீங்கள் மதிக்க வேண்டும். அவர் விரைவில் தன்னுடைய வெள்ளை பந்து கேப்டன்சிப் பொறுப்பையும் நேரம் வரும் போது உங்களிடம் ஒப்படைப்பார். அது வரை நீங்கள் அவரை மதிக்க வேண்டும்”

Sridhar

“அதையும் மீறி நீங்கள் கேப்டனாக வந்தால் நாளை அணி வீரர்களிடம் உங்களுக்கு மதிப்பு கிடைக்காது. எனவே என்ன நடக்கிறது என்பதை தாண்டி முதலில் அவருக்கு மதிப்பு கொடுங்கள். பின்னர் அது தாமாகவே உங்களிடம் வந்து சேரும். அதைத் தேடி நீங்கள் ஓட வேண்டிய அவசியமில்லை” என்று பேசி சமாதானப்படுத்தினார். அதே போன்ற அறிவுரையை பிசிசிஐ தரப்பில் இருந்தும் விராட் கோலி பெற்றார். இறுதியில் அடுத்த வருடமே வெள்ளைப் பந்து அணியின் கேப்டன்ஷிப் பொறுப்பும் அவருக்கு கிடைத்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: விராட் கோலி செஞ்சுரி அடிச்சா மட்டும் தான் இப்படியெல்லாம் பேசறாங்க – சல்மான் பட் சாடல்

இதை ஒரு ரசிகர் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள நிலையில் தோனிக்கு பின் கேப்டனாக பொறுப்பேற்ற விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரையும் மிஞ்சி வெற்றிகரமான ஆசிய கேப்டனாகவும் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் நிறைய வெற்றிகளையும் பெற்றுக் கொடுத்து அசத்தினார். இருப்பினும் தோனியை போல் எவ்விதமான உலக கோப்பையையும் அவரால் வெல்ல முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement