விராட் கோலி செஞ்சுரி அடிச்சா மட்டும் தான் இப்படியெல்லாம் பேசறாங்க – சல்மான் பட் சாடல்

Butt
Advertisement

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் கடந்த 2019-ஆம் ஆண்டிற்கு பின்னர் சதம் அடிக்காமல் சற்று தடுமாற்றத்தை சந்தித்து வந்தார். ஆனால் அந்த சறுக்கலில் இருந்து மீண்ட விராட் கோலி ஆசியக்கோப்பை தொடரின் போது ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக டி20 கிரிக்கெட்டில் சதம் விளாசினார். அதனை தொடர்ந்து கடந்த மாதம் பங்களாதேஷ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் மூன்றாவது போட்டியில் சதம் அடித்த அவர் தற்போது இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த முதலாவது ஒருநாள் போட்டியில் கூட சதம் அடித்து அசத்தியுள்ளார்.

Virat Kohli

ஒருநாள் கிரிக்கெட்டில் 45-ஆவது சதத்தை பதிவு செய்த விராட் கோலி சொந்த மண்ணில் விரைவாக 20 சதங்களை அடித்த வீரர் என்ற சாதனையில் சச்சினையும் பின்னுக்கு தள்ளியுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் சதம் அடிப்பதை வாடிக்கையாக வைத்திருக்கும் விராட் கோலி தற்போது தான் தனது இயல்பான நிலைக்கு திரும்பியுள்ளார் என ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

- Advertisement -

அதேவேளையில் அவர் அடித்த இந்த சதத்தை சிலர் விமர்சிக்கவும் செய்கிறார்கள். அந்த வகையில் ஆடுகளம் பிளாட்டாக இருந்தது, இலங்கை வீரர்கள் சரியாக பந்து வீசவில்லை என்று பலரும் பல்வேறு குறைகளை வைத்திருந்தனர். அதோடு கௌதம் கம்பீர் கூட சச்சினை விராட் கோலியுடன் எப்படி ஒப்பிடுவீர்கள்? விராட் கோலி 200 சதம் அடித்தால் கூட சச்சினிடம் நெருங்க முடியாது என்று விமர்சனங்களை தெரிவித்து இருந்தார்.

Kohli

இந்நிலையில் விராட் கோலிக்கு வழங்க வேண்டிய பெருமையை பலர் வழங்குவதில்லை என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான சல்மான் பட் விராட் கோலி குறித்தும், அவரை விமர்சிக்கும் விமர்சகர்களை சாடியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

- Advertisement -

விராட் கோலி சதம் அடித்தால் மட்டும் அப்போது அது பிளாட் பிட்ச், எதிரணி வீரர்கள் சரியாக பந்து வீசவில்லை என்று பலரும் குறை கூறுகின்றனர். ஆனால் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு சதம் மட்டும் அடிக்கவில்லை 73 முறை சதம் விளாசியுள்ளார். நீங்கள் கூறுவது போல இருந்தால் ஒரு சில சதங்கள் மட்டுமே அவரால் அடித்திருக்க முடியும்.

இதையும் படிங்க : அடுத்த மேட்ச் ட்ராப் பண்ணிடுவாங்க, அசத்திய இளம் வீரருக்காக இந்திய அணியை கலாய்த்த முன்னாள் வீரர் – ரசிகர்கள்

ஆனால் விராட் கோலி உலகின் முன்னணி பவுலர்களுக்கு எதிராகவும் தனது ஆதிக்கத்தை செலுத்தியுள்ளார். அதேபோன்று உலகின் எந்த மைதானமாக இருந்தாலும் போராட்டத்தை அளித்து சதங்களை விளாசி இருக்கிறார். அவருக்கு உண்டான பெருமை தரவில்லை என்றாலும் விமர்சிக்க வேண்டாம் என்று சல்மான் பட் கூறியுள்ளார்.

Advertisement