அடுத்த மேட்ச் ட்ராப் பண்ணிடுவாங்க, அசத்திய இளம் வீரருக்காக இந்திய அணியை கலாய்த்த முன்னாள் வீரர் – ரசிகர்கள்

Kuldeep Yadav Ind Shubman gill kl rahul
- Advertisement -

இலங்கைக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் வென்ற இந்தியா ஜனவரி 12ஆம் தேதியன்று நடைபெற்ற 2வது போட்டியிலும் 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்று 2 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே கோப்பையை கைப்பற்றியுள்ளது. உலக புகழ் பெற்ற கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை இந்தியாவின் தரமான பந்து வீச்சில் 39.4 ஓவரில் 215 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக நுவனிடு பெர்னாண்டோ 50 ரன்களும் குசால் மெண்டிஸ் 34 ரன்களும் எடுத்தனர்.

இந்தியா சார்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் மற்றும் சிராஜ் தலா 3 விக்கெட்களை சாய்த்தனர். அதைத் தொடர்ந்து 216 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு ரோஹித் சர்மா 17, சுப்மன் கில் 21, விராட் கோலி 4, ஷ்ரேயஸ் ஐயர் 28 என முக்கிய வீரர்கள் ஆரம்பத்திலேயே இலங்கையின் கட்டுக்கோப்பான பந்து வீச்சில் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றமளித்தனர். அதனால் 86/4 என சரிந்த இந்தியாவை 5வது விக்கெட்டுக்கு ராகுலுடன் இணைந்து 75 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து மீட்டெடுத்த ஹர்திக் பாண்டியா 36 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

- Advertisement -

ட்ராப் பண்ண போறாங்க:
அடுத்து வந்த அக்சர் பட்டேல் 21 (21) ரன்களும் குல்தீப் யாதவ் 10* (10) எடுக்க மறுபுறம் நங்கூரமாக செயல்பட்ட ராகுல் 6 பவுண்டரியுடன் 64* ரன்கள் குவித்து 43.2 ஓவரிலேயே 219/6 ரன்களை எடுக்க வைத்து இந்தியாவை வெற்றி பெற வைத்தார். அதனால் சொந்த மண்ணில் வலுவான அணி என்பதை நிரூபித்த இந்தியா 2023 உலக கோப்பை வெல்லும் பயணத்தை வெற்றியுடன் துவங்கியுள்ளது. இந்த வெற்றிக்கு பந்து வீச்சில் போராடிய இலங்கை பேட்டிங்கில் 250 ரன்கள் எடுக்கத் தவறியதே முக்கிய காரணமாக அமைந்தது.

குறிப்பாக 250 ரன்களை தொடவிடாமல் கேப்டன் சனாக்கா உள்ளிட்ட 3 வீரர்களின் விக்கெட்டுகளை எடுத்து பேட்டிங்கில் 10* ரன்கள் எடுத்து வெற்றிக்கு பங்காற்றிய குல்தீப் யாதவ் ஆட்டநாயகன் விருது வென்றார். அப்படி அசத்தலாக செயல்பட்ட அவரை நீங்கள் ஏன் சொதப்பாமல் இப்படி சிறப்பாக செயல்பட்டீர்கள்? இப்படி அசத்தலாக செயல்பட்டதால் அடுத்த போட்டியில் உங்களை அதிரடியாக அணியிலிருந்து நீக்க போகிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா? என்று ஏராளமான ரசிகர்களும் சில முன்னாள் வீரர்களும் சமூக வலைதளங்களில் பரிதாபத்தை வெளிப்படுத்துகிறார்கள்.

- Advertisement -

ஏனெனில் 2019 வாக்கில் இந்தியாவின் முதன்மை ஸ்பின்னராக உருவெடுத்த அவர் 2020/21 வாக்கில் பார்மை இழந்து கழற்றி விடப்பட்டாலும் மனம் தளராமல் போராடி 2022 ஐபிஎல் தொடரில் டெல்லி அணியில் அபாரமாக செயல்பட்டு மீண்டும் இந்திய அணியில் கம்பேக் கொடுத்தார். குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 22 மாதங்கள் கழித்து கடந்த மாதம் வங்கதேசம் மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் 8 விக்கெட்டுகள் சாய்த்து பேட்டிங்கிலும் முக்கியமான 40 ரன்களை எடுத்து அசத்திய அவர் இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருதை வென்றார்.

ஆனாலும் அதற்கடுத்த போட்டியில் மனசாட்சியின்றி நியாயமின்றி அவரை கேஎல் ராகுல் – ராகுல் ட்ராவிட் ஆகியோர் தலைமையிலான இந்திய அணி நிர்வாகம் அதிரடியாக நீக்கியது ரசிகர்களுக்கும் அவருக்கும் ஏமாற்றமாக அமைந்தது. மறுபுறம் தொடர்ந்து சொதப்பலாக செயல்பட்டும் ராகுல் போன்ற வீரர்கள் இந்திய அணியில் தொடர்ந்து வாய்ப்பு பெற்று வருவது வாடிக்கையாகி விட்டது.

- Advertisement -

எடுத்துக்காட்டாக சஞ்சு சாம்சன் 2022 வருடம் கிடைத்த வாய்ப்புகளில் அசத்தலாக செயல்பட்டும் தொடர்ச்சியாக வாய்ப்பு பெறவில்லை. அந்த வகையில் இப்போட்டியில் அசத்தலாக செயல்பட்டு மீண்டும் மிகச்சிறந்த கம்பேக் கொடுத்துள்ள குல்தீப் யாதவ் அடுத்த போட்டியிலேயே அதிரடியாக நீக்கப்பட்டால் அதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை என்று நிறைய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இந்திய அணி நிர்வாகத்தை கிண்டலடித்து வருகிறார்கள்.

இதையும் படிங்க: கண்டிப்பா இவருக்கு சீக்கிரம் ஐ.பி.எல் வாய்ப்பு கிடைக்கும் பாருங்க – இலங்கை பயிற்சியாளர் நம்பிக்கை

குறிப்பாக நாட்டுக்காக வெற்றியை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தை தூக்கி எறிந்து விட்டு சுயநலத்துடன் செயல்படுங்கள் என்று குல்தீப் யாதவுக்கு அட்வைஸ் கொடுக்கும் ரசிகர்கள் இந்திய அணி நிர்வாகத்தை விதவிதமாக கலாய்க்கிறார்கள். அதன் உச்சகட்டமாக முன்னாள் இந்திய வீரர் டோட்டா கணேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் இது பற்றி பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “போதும் குல்தீப். இவ்வளவு விக்கெட்டுகளை எடுக்க வேண்டாம். ஏற்கனவே 3 விக்கெட்டுகளை எடுத்துள்ள நீங்கள் அடுத்த போட்டியில் கைவிடப்படுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம்” என்று கூறியுள்ளார்.

Advertisement