அவருக்காக தான் தினேஷ் கார்த்திக்கை செலக்ட் பண்ணல – தோனியின் முடிவினை பற்றி பகிர்ந்த பயிற்சியாளர்

Dinesh Karthik MS Dhoni
- Advertisement -

இந்திய அணியின் நட்சத்திர முன்னாள் வீரர் எம்எஸ் தோனி கடந்த 2004இல் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி அடுத்த சில வருடங்களிலேயே அதிரடியான பேட்டிங், சிறப்பான விக்கெட் கீப்பிங் போன்ற சிறப்பான செயல்பாடுகளால் நிரந்தரமான விக்கெட் கீப்பராக உருவெடுத்தார். சொல்லப்போனால் தோனிக்கு முன் தோனிக்கு பின் என 2 வகையாக பிரிக்கும் அளவுக்கு இந்திய கிரிக்கெட் வரலாற்றில் விக்கெட் கீப்பர்கள் என்றால் அதிரடியாகவும் விளையாடி பெரிய அளவில் ரன்களை குவிக்க வேண்டும் என்ற அடிப்படை இலக்கணத்தை மாற்றிய பெருமை அவரையே சேரும்.

MS Dhoni vs DInesh Karthik

- Advertisement -

 

அத்துடன் அனுபவமில்லாத கேப்டன்ஷிப் பொறுப்பில் முதல் தொடரிலேயே 2007 டி20 உலகக் கோப்பையை வென்று காட்டிய அவர் 2011 உலக கோப்பை 2013 சாம்பியன்ஸ் டிராபி என்ற அடுத்தடுத்த கோப்பைகளை வென்றதால் யாராலும் நீக்க முடியாத நிரந்தர விக்கெட் கீப்பர் மற்றும் கேப்டனாக உருவெடுத்தார். அதனாலேயே அவரது காலத்தில் விளையாடிய தினேஷ் கார்த்திக், பார்திவ் படேல், சஹா போன்ற இதர விக்கெட் கீப்பர்களுக்கு தொடர்ச்சியான வாய்ப்புகள் கிடைக்காமலேயே போனது.

வரலாற்று முடிவு:
மேலும் கேப்டனாகவும் ஒரு கட்டத்துக்கு பின் இந்தியாவின் வருங்காலத்தை கருத்தில்கொண்டு வீரேந்திர சேவாக் உள்ளிட்ட நிறைய சீனியர் வீரர்களை பாரபட்சமின்றி அணியிலிருந்து நீக்க காரணமாக இருந்த அவர் விமர்சனங்களையும் தாண்டி திறமையான இளம் வீரர்களுக்கு அதிகப்படியான வாய்ப்புகளும் ஆதரவும் கொடுத்தார். அதனாலேயே இன்றைய இந்திய அணியில் விளையாடும் ரோகித் சர்மா, விராட் கோலி, அஷ்வின், ரவீந்திர ஜடேஜா என கிட்டத்தட்ட 70% வீரர்கள் அவர்களால் வளர்க்கப்பட்டு வளமான எதிர்காலத்தை காண்பித்து வருகிறார்கள்.

- Advertisement -

Rohith

ஒருவேளை அந்த முடிவு அவர் எடுக்காமல் போயிருந்தால் இந்நேரம் தென்னாப்பிரிக்கா, இலங்கை போன்ற அணிகளை போல் அடுத்த தலைமுறை வீரர்கள் இல்லாமல் இந்தியாவும் மண்ணைக் கவ்விக் கொண்டிருக்கும். அந்த வகையில் தோனி எடுத்த நிறைய முடிவுகளில் 2007இல் அறிமுகமாகி 2012 வரை மிடில் ஆர்டரில் ஏராளமான வாய்ப்புகளை பெற்று சுமாராக செயல்பட்டு நிலையான இடத்தைப் பிடிக்கத் தவறி வந்த ரோகித் சர்மாவுக்கு தொடக்க வீரராக களமிறங்கும் வாய்ப்பை கொடுத்தது மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

ஏனெனில் தொடக்க வீரராக களமிறங்கிய பின் 3 இரட்டை சதங்கள், ஒரே உலக கோப்பையில் 5 சதங்கள் உட்பட பிரம்மாண்ட பேட்டிங்கை வெளிப்படுத்தி ஏராளமான வெற்றிகளை பெற்று கொடுத்து வரும் ரோகித் சர்மா இன்று இந்தியாவின் முழு நேர கேப்டனாகும் அளவுக்கு உயர்ந்துள்ளார். அப்படிப்பட்ட அந்த வரலாற்று முடிவு கடந்த 2013இல் இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபியின் போது தான் எம்எஸ் தோனி எடுத்தார்.

- Advertisement -

Sridhar

ரோஹித்துக்காக டிகே:
அந்த தொடரில் விளையாடிய தமிழகத்தின் தினேஷ் கார்த்திக் பயிற்சி போட்டியின் போது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சதமடித்து 146 ரன்கள் குவித்ததால் விளையாடும் 11 பேர் கொண்ட அணியில் குறிப்பாக 4-வது இடத்தில் இடம் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரோகித் சர்மாவை தொடக்க வீரராக களமிறக்கலாம் என்று தோனி முடிவெடுத்ததால் தினேஷ் கார்த்திக்க்கு வாய்ப்பு வழங்க முடியாமல் போய்விட்டது என முன்னாள் இந்திய பயிற்சியாளர் ஆர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “2013 சாம்பியன்ஸ் டிராபியில் தோனி ஒரு முக்கியமான முடிவை எடுத்தார். அதுதான் ரோகித் சர்மாவை தொடக்க வீரராக களமிறக்குவது. அதேசமயம் தினேஷ் கார்த்திக் பயிற்சி போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டிருந்தாலும் ரோகித் சர்மாவுக்கு வாய்ப்பு வழங்க வேண்டியிருந்தது. எனவே அப்போதைய தோனி தலைமையிலான அணி நிர்வாகம் ரோகித் சர்மாவுக்கு டாப் ஆர்டரில் விளையடடும் இடத்தை வழங்கியது. இறுதியில் அது மிகச் சிறந்த முடிவாக மாறியது” என்று கூறினார்.

- Advertisement -

இருப்பினும் கூட அந்த தொடரின் இறுதிப் போட்டியில் 4-வது இடத்தில் விளையாடும் வாய்ப்பை தினேஷ் கார்த்திக்க்கு தோனி வழங்கியிருந்தார். அதில் சுமாராக செயல்பட்ட அவர் தற்போது தோனி ஓய்வு பெற்றபின் 37 வயதில் அட்டகாசமாக செயல்பட்டு இந்திய அணியில் ஒரு நல்ல இடத்தை பிடித்துள்ளார். மேலும் அந்த முடிவை போலவே தற்போதைய இந்திய டி20 அணியில் சூர்யகுமார் யாதவுக்கு தொடக்க வீரராக சோதனை முயற்சியாக களமிறங்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கும் ஸ்ரீதர் இது பற்றி மேலும் பேசியது பின்வருமாறு.

இதையும் படிங்க:  டி20 கிரிக்கெட்டில் இவரு நம்பர் 1 பிளேயரா வருவாரு. அவரை உ.கோ டீம்ல எடுங்க – ஸ்ரீகாந்த் ஓபன்டாக்

“கடந்த சில வருடங்களுக்கு முன்பாகவே இங்கிலாந்துக்கு எதிராக சூரியகுமாரை டாப் ஆர்டரில் களமிறக்க நாங்கள் நினைத்தோம். அவரிடம் அந்த திறமை உள்ளது என்பதை தற்போதைய வெஸ்ட் இண்டீஸ் தொடரில் பார்க்கிறோம். அதேபோல் 3-வது இடத்தில் விராட் கோலி விளையாடவில்லை என்பதற்காகவே ஸ்ரேயாஸ் அய்யர் விளையாடுகிறார்” என்று கூறினார்.

Advertisement