டி20 கிரிக்கெட்டில் இவரு நம்பர் 1 பிளேயரா வருவாரு. அவரை உ.கோ டீம்ல எடுங்க – ஸ்ரீகாந்த் ஓபன்டாக்

Srikkanth
Advertisement

கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்த டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி லுக் லீக் சுற்றோடு வெளியேறியதன் காரணமாக விராட் கோலியின் கேப்டன்சியின் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. அதன் காரணமாக உலகக்கோப்பை தொடர் முடிந்த பிறகு ரோகித் சர்மா இந்திய அணியின் புதிய கேப்டனாக பதவியேற்று தற்போது அணியை திறம்பட வழிநடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த டி20 உலகக்கோப்பை தொடருக்கு அடுத்து இந்திய அணிக்காக தற்போது வரை 11 வேகப்பந்துவீச்சாளர்கள் சுழற்சி முறையில் விளையாடி வருகின்றனர்.

Bhuvi

இவர்களில் எந்தெந்த வீரர்களை வைத்து இந்த ஆண்டிற்கான டி20 உலகக் கோப்பை அணியை தேர்வு செய்யப் போகிறார்கள் என்பதில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏனெனில் தற்போது உள்ள அணியில் ஏகப்பட்ட வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு வருவதனால் எப்படி இந்திய அணியின் தேர்வு இருக்கப் போகிறது என்பது குறித்து எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் உள்ளது.

- Advertisement -

எதிர்வரும் டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் முதன்மை வேகப்பந்து வீச்சாளர்களாக புவனேஷ்வர் குமார் மற்றும் பும்ரா ஆகியோர் விளையாடுவது உறுதியாகியுள்ளது. அவர்கள் இருவருக்கு அடுத்து எந்தெந்த வேகப்பந்து வீச்சாளர்கள் அணியில் இடம் பெறுவார்கள் என்கிற எதிர்பார்ப்பே தற்போது உச்சத்தில் உள்ளது. இந்நிலையில் தமிழக கிரிக்கெட்ரும், இந்திய அணியின் முன்னாள் வீரருமான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் எதிர்வரும் டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இளம் வேகப்பந்து வீச்சாளரான அர்ஷ்தீப் சிங்கை தேர்வு செய்ய வேண்டும் என வேண்டுகோள் வைத்துள்ளார்.

Arshdeep Singh

நடைபெற்று முடிந்த ஐ.பி.எல் தொடரில் அவர் டெத் ஓவர்களில் பவுண்டரிகளை விட்டுக் கொடுக்காமல் மிகவும் சிக்கனமாக பந்து வீசி அசத்தினார். இதன் காரணமாக இங்கிலாந்து அணிக்கு எதிராக கடந்த மாதம் நடைபெற்ற டி20 தொடரில் அறிமுகமான அவர் தற்போது வரை நான்கு போட்டிகளில் விளையாடி ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். அது மட்டும் இன்றி ஓவருக்கு ஏழு ரன்களுக்கும் குறைவாகவே அவர் விட்டுக் கொடுத்துள்ளார்.

- Advertisement -

டெத் ஓவரில் அற்புதமாக பந்து வீசுவதனாலும், ரன்களை குறைவாக விட்டுக்கொடுப்பதனாலும் அவரை டி20 உலக கோப்பை தொடருக்கு தேர்வு செய்ய வேண்டும் என ஸ்ரீகாந்த் கூறியுள்ளார். இது குறித்து அவர் பேசுகையில் : டி20 கிரிக்கெட்டில் நிச்சயம் வருங்காலத்தில் நம்பர் ஒன் வீரராக அர்ஷ்தீப் சிங் மாறுவார். அந்த அளவிற்கு அவரது பந்துவீச்சில் அற்புதமான வெரியேஷன்கள் உள்ளன.

இதையும் படிங்க : 2021 உலககோப்பை மாதிரி ஆசிய கோப்பையிலும் இந்தியாவை தோற்கடிப்போம் – முன்னாள் பாக் வீரர் உறுதி

என்னை பொறுத்தவரை டி20 உலக கோப்பையில் அவரையும் தேர்வு செய்ய வேண்டும் என தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மாவிடம் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். ஏற்கனவே பும்ரா மற்றும் புவனேஷ்வர் குமார் ஆகியோர் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளராக விளையாடுவார்கள் என்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ள இடங்களுக்கு அர்ஷ்தீப் சிங், ஹர்ஷல் படேல், தீபக்சாகர், ஆவேஷ் கான் மற்றும் முகமது ஷமி ஆகியோருக்கு இடையே பலத்த போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement