
இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் இந்தியா 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. அந்தத் தொடரில் முதல் 2 போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளைப் பெற்ற இந்தியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து மூன்றாவது போட்டி ஜனவரி 28ஆம் தேதி ராஜ்கோட் நகரில் நடைபெற உள்ளது.
முன்னதாக சென்னையில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் 166 ரன்களை துரத்திய இந்தியா அதிரடியாக விளையாடி ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளையும் இழந்தது. அதனால் 9 ஓவரில் 78-6 என இந்தியா சரிவை சந்தித்ததால் ரசிகர்கள் கவலை அடைந்தனர். ஆனால் அப்போது சூழ்நிலைக்கு தகுந்தார் போல் நங்கூரத்தை போட்ட திலக் வர்மா 72* (55) ரன்கள் குவித்து ஃபினிஷிங் செய்து இந்தியாவை வெற்றி பெற வைத்தார்.
இந்நிலையில் இங்கிலாந்து அணி இந்தியாவில் விளையாடும் போது அதிரடியாகவே விளையாடி வென்று விடலாம் என்று நினைப்பதாக ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார். ஆனால் இங்கே அவ்வப்போது சூழ்நிலைக்கு தகுந்தார் போல் விளையாட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். எனவே வரும் காலங்களில் இங்கிலாந்து அணியை போல இந்தியாவும் பயமற்ற கிரிக்கெட்டை விளையாடுகிறோம் என்ற பெயரில் சூழ்நிலைக்கு தகுந்தார் போல் விளையாடுவதை மறந்து விடக்கூடாது என்று அஸ்வின் அக்கறையுடன் எச்சரித்துள்ளார்.
இது பற்றி யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “இங்கிலாந்து முழுமையற்ற கிரிக்கெட்டை விளையாடினார்கள். அவர்கள் தொடர்ச்சியான தவறுகளை செய்தார்கள். நீங்கள் இந்தியாவில் விளையாடும் போது ஒரே மாதிரியாக விளையாட முடியாது. எடுத்துக்காட்டாக பெங்களூருவில் நிலவும் போக்குவரத்து நெரிசலில் உங்களால் வண்டியை 4வது கியரில் ஓட்ட முடியாது”
“அதே லாஜிக் தான் இங்கேயும் பொருந்தும். சில நேரங்களில் நீங்கள் இங்கே அப்படி விளையாட முடியாது. கடந்த முறையும் நான் இதைத் தெரிவித்தேன். இந்திய அணி பயமற்ற பேய் போன்ற கிரிக்கெட்டை விளையாடும் அணுகு முறையை பின்பற்றுவது நல்லது. குறிப்பாக பவர் பிளே ஓவர்களில் நீங்கள் பயமின்றி தான் விளையாட வேண்டும்”
இதையும் படிங்க: தோல்வியை பற்றி தெரியாத வட மண்ணுல வந்த விராட் கோலி இந்த அணுகுமுறை கொண்டவர்.. ரெய்னா ஆதரவு
“அதே சமயம் நீங்கள் சூழ்நிலைகளுக்கும் மதிப்பு கொடுக்க வேண்டும். ஏனெனில் அனைத்து விதமான சூழ்நிலைகளும் ஆக்ரோசமாக பேட்டிங் செய்வதற்கு பொருத்தமாக இருக்காது. அதனாலேயே கிரிக்கெட்டில் சூழ்நிலைகள் தான் அரசன் என்று சொல்லப்படுகிறது” எனக் கூறினார். அவர் கூறுவது போல கடந்தப் போட்டியில் திலக் வர்மா சூழ்நிலையை மதித்து விளையாடாமல் போயிருந்தால் இந்திய வென்றிருக்காது என்றே சொல்லலாம்.