மன்னிப்பு கேட்க வேண்டிய பாகிஸ்தான்.. இந்தியாவை பழிவாங்க அவரை பலி கிடவாக்கலாமா? அஸ்வின் விளாசல்

R ashwin 2
- Advertisement -

ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரில் சூப்பர் 4 சுற்றில் இந்தியா தங்களது முதல் போட்டியில் இன்று பரம எதிரி பாகிஸ்தானையும் சந்திக்கிறது. இத்தொடரில் லீக் சுற்றுப்போட்டியில் பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது. அந்தப் போட்டியின் முடிவில் பாகிஸ்தான் வீரர்களுடன் இந்திய அணி கைகுலுக்காதது பெரிய சர்ச்சையாக உண்டானது.

மேலும் அந்தப் போட்டியில் “பிரச்சனைகளைத் தவிர்க்க கைகொடுத்து கொள்ளாதீர்கள்” என்று இரு அணி கேப்டன்களிடமும் நடுவர் ஆண்டி ஃபைக்ராப்ட் தனிப்பட்ட முறையில் கேட்டுக் கொண்டதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியது. எனவே அவரை உடனடியாக நீக்காவிட்டால் ஆசியக் கோப்பையிலிருந்து விலகுவோம் என்றும் பாகிஸ்தான் அறிவித்தது. இருப்பினும் விதிமுறையை மீறாத நடுவரை ஐசிசி ஆசியக் கோப்பையிலிருந்து நீக்கவில்லை.

- Advertisement -

ஸ்கூல் டீச்சர் இல்ல:

இறுதியில் அமீரகத்துக்கு எதிரான போட்டிக்கு முன்பாக ஃபைக்ராப்ட் தங்களிடம் மன்னிப்பு கேட்டதால் தொடர்ந்து ஆசியக் கோப்பையில் விளையாடுவோம் என்று அறிவித்த பாகிஸ்தான் வாரியம் அதற்கு ஆதாரமாக ஒலியற்ற வீடியோவை பதிவிட்டது. இந்நிலையில் பாகிஸ்தானின் அந்த செயலுக்கு ரவிச்சந்திரன் அஸ்வின் பதிலடி கொடுத்துள்ளார். இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு.

“உண்மையில் ஆண்டி ஃபைக்ராப்ட் அது போன்ற மோசமான காட்சியைப் பார்க்காமல் அனைவரையும் காப்பாற்றினார். கைகுலுக்காதது எங்களுடைய முடிவு என்பதால் நாங்கள் அதை பின்பற்றுவோம் என்று நடுவரிடம் இந்தியா முன்கூட்டியே தெரிவித்தது. அவ்வளவு தான். அந்த நாடகத்துக்கு பின் தோற்ற நீங்கள் (பாகிஸ்தான்) எதைப் பற்றி புகார் செய்கிறீர்கள்? நாங்கள் கைகுலுக்காததால் நீங்கள் போட்டியில் தோற்கவில்லை”

- Advertisement -

அஸ்வின் விளாசல்:

“நீங்கள் தயவு செய்து கிரிக்கெட்டில் எப்படி மேம்படலாம் என்பதைக் கண்டறியவும். இந்தியா கைகுலுக்காதது தான் உங்களுடைய பிரச்சனையென்றால் அதற்கான பதிலை நீங்கள் ஏன் அமீரகத்துக்கு எதிரான போட்டியில் தேடினீர்கள்? ஃபைக்ராப்ட் அவர்களை ஏன் பலிக்கிடாவாக உருவாக்கினீர்கள்? அவர் எந்த தவறும் செய்யவில்லை. சூரியகுமாரிடம் சென்று பாகிஸ்தானுடன் கை கொடுங்கள் என்று சொல்வதற்கு ஃபைக்ராப்ட் ஒன்றும் பள்ளி ஆசிரியர் அல்லது முதல்வர் கிடையாது”

இதையும் படிங்க: 7 வருடம் கழித்து.. 8க்கு 8.. பாலை குடித்து விட்டு இலங்கையை பாம்பாக கொத்திய வங்கதேசம்.. சாதனை வெற்றி

“அது அவருடைய வேலையும் கிடையாது. அவருடைய தவறு என்ன? இந்தியாவுக்காக விளையாடும் எங்கள் வீரர்கள் விதிமுறைகளை பின்பற்றினார்கள். கைகுலுக்கப் போவதில்லை என்று முடிவெடுத்தது அவர்களுடைய கதை. அது அங்கேயே முடிய வேண்டும். அதற்காக இந்தியா மீது புகார் செய்த நீங்கள் புழுதி அடங்கிய போது ஃபைக்ராப்ட் மன்னிப்பு கேட்டதாக சொல்கிறீர்கள். உண்மையில் மன்னிப்பு கேட்க வேண்டியவர் பாகிஸ்தானே தவிர ஃபைக்ராப்ட் அல்ல” என்று கூறினார்.

Advertisement