- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ரிஷப் பண்ட் பற்றி சொன்னதுக்கு.. ஓக்ஸ் ரூபத்தில் கர்மா பென் ஸ்டோக்ஸை பழி வாங்கிடுச்சு.. அஸ்வின் சாடல்

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய டெஸ்ட் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று 2 – 2 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது. அத்தொடரில் வெற்றிக்காக இரு அணி வீரர்களும் தங்களுடைய அனைத்தையும் கொடுத்தார்கள் என்றே சொல்லலாம். குறிப்பாக 4வது போட்டியில் பாதத்தில் காயமடைந்த ரிஷப் பண்ட் நடக்க முடியாமல் தடுமாறினார்.

இருப்பினும் அதற்கெல்லாம் அசராத அவர் நாட்டுக்காக மீண்டும் பேட்டிங் செய்ய வந்து 53 ரன்கள் குவித்தது பலரது பாராட்டுக்களைப் பெற்றது. அதே போல இங்கிலாந்து வீரர் கிறிஸ் ஓக்ஸ் கடைசி நாளில் தோல்வியைத் தவிர்ப்பதற்காக ஒற்றைக் கையுடன் பேட்டிங் செய்ய வந்தது அனைவரையும் பாராட்ட வைத்தது. முன்னதாக இப்படி திடீரென காயமடைபவர்களுக்கு பதிலாக மாற்று வீரரை விளையாட வைக்க முடியாது என்பது ஐசிசி விதிமுறையாகும்.

- Advertisement -

ஜோக் செய்த ஸ்டோக்ஸ்:

அதனால் காயமடையும் வீரருக்கு பதிலாக மாற்று வீரரை விளையாட வைப்பதற்கு விதிமுறைகளில் தேவையான மாற்றம் செய்ய வேண்டும் என்று 4வது போட்டியின் முடிவில் ஐசிசிக்கு கௌதம் கம்பீர் கோரிக்கை வைத்திருந்தார். ஆனால் அதெல்லாம் நகைச்சுவை, 10 பேர் விளையாடியும் வெற்றி காண முடியும் என்று இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த விவகாரத்தில் பென் ஸ்டோக்ஸை கர்மா பழி தீர்த்துள்ளதாக ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “நீங்கள் விதைப்பதையே அறுவடை செய்ய முடியும். மான்செஸ்டரில் ரிஷப் பண்ட் காயம் பற்றி செய்தியாளர்கள் சந்திப்பில் கேட்கப்பட்டது. அதற்கு இது போன்ற காயங்கள் வரும் போது உடனடியாக மாற்று வீரர்கள் தேவை என்று கௌதம் கம்பீர் தெரிவித்திருந்தார். அதே கேள்வி பென் ஸ்டோக்ஸிடமும் கேட்கப்பட்டது”

- Advertisement -

பழி தீர்த்த கர்மா:

“அதற்கு “இந்த கேள்வி ஒரு நகைச்சுவை” என்று ஸ்டோக்ஸ் சொன்னார். அவருடைய மிகப்பெரிய ரசிகரான நான் அவருடைய அணுகுமுறையை ரசிக்கிறேன். ஆனால் நீங்கள் பேசுவதற்கு முன் சிந்திக்க வேண்டும். இன்று கிறிஸ் ஓக்ஸ் இங்கிலாந்துக்கு உதவி செய்வதற்காக தனது ஒற்றைக்கையை சட்டைக்குள் வைத்துக்கொண்டு விளையாட வந்தார்”

இதையும் படிங்க: இதுதான் சரியான நேரம்.. அவரை தூக்கிட்டு சுப்மன் கில்லை கேப்டனா போடுங்க – கவாஸ்கர் கொடுத்த யோசனை

“கிட்டத்தட்ட வெற்றியை நெருங்கிய அவருடைய அர்ப்பணிப்புக்கு தலை வணங்குகிறேன். இருப்பினும் அது போன்ற காயத்திற்கு மாற்று வீரர் தேவை என்று மைக்கேல் வாகனும் தெரிவித்திருந்தார். என்னைப் பொறுத்த வரை மற்ற அணிகளின் கருத்தையும் பாருங்கள் என்று சொல்வேன். ரிஷப் பண்ட் போன்றவர் காயத்தால் வெளியேறும் போது என்னவாகும் என்பதை ஸ்டோக்ஸ் கருத வேண்டும். நீங்கள் உங்களுடைய கருத்தைத் தெரிவிப்பதற்கான சுதந்திரத்தைப் பெற்றுள்ளீர்கள். அதற்காக மற்றவர்கள் கருத்தை நகைச்சுவை என்று சொல்வது மரியாதையற்றது. பேசுவதற்கு முன் சிந்தியுங்கள். ஏனெனில் உங்களை கர்மா உடனடியாக அடித்துள்ளது” என்று கூறியுள்ளார்.

- Advertisement -