- Advertisement -
இந்திய கிரிக்கெட்

4 வருசமா தோத்துட்டு இந்தியாவை குறைத்து பேசி காமெடியா பண்றிங்க.. டக்கெட்டை விளாசிய அஸ்வின்

ஐசிசி சாம்பியன்ஸ் 2025 தொடருக்கு முன்பாக இந்தியா தங்களது சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடியது. அதில் 3 – 0 என்ற கணக்கில் வெற்றி பெற்ற இந்தியா தங்களை சொந்த மண்ணில் வலுவான அணி என்பதை நிரூபித்தது. மறுபுறம் இந்தியாவுக்கு எதிராக ஒயிட்வாஸ் தோல்வியை சந்தித்தாலும் கவலையில்லை என்று இங்கிலாந்து துவக்க வீரர் பென் டக்கெட் இரண்டாவது போட்டிக்கு முன் தெரிவித்தார்.

ஏனெனில் சாம்பியன்ஸ் டிராபி ஃபைனலில் இந்தியாவையே தோற்கடிக்கும் திறமை தங்களிடம் இருப்பதாக அவர் ஜாலியாக கூறினார். அவை அனைத்தும் முக்கியமான நேரத்தில் உச்சகட்ட செயல்பாடுகளை வெளிப்படுத்துவதை பற்றியதாகும் என்று அவர் கூறினார். கடைசியில் அடக்கெட் வர் கேட்டது போலவே இங்கிலாந்து அணிக்கு இந்தியா ஒய்ட்வாஸ் தோல்வியை பார்சல் கட்டியது.

- Advertisement -

அஸ்வின் பதிலடி:

இந்நிலையில் கடந்த 4 வருடங்களாகவே ஒருநாள் கிரிக்கெட்டில் சுமாராக விளையாடும் இங்கிலாந்து அணியினர் இப்படி இந்தியாவை கிண்டலடிப்பது சரியல்ல என அவருக்கு ரவிச்சந்திரன் அஸ்வின் பதிலடி கொடுத்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இங்கிலாந்து அணியிடம் திறமை இல்லை என்று அர்த்தமில்லை. இந்த இங்கிலாந்து அணி டாப் கிளாஸ் நிறைந்தது என்று மீண்டும் நான் சொல்வேன்”

“ஆனால் இந்தியாவுக்கு எதிரான இந்த ஒருநாள் தொடரை அவர்கள் குறைவாக எடுத்துக் கொண்டார்கள். பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபியில் இங்கிலாந்து வித்தியாசமாக விளையாடலாம். ஒருவேளை அங்கேயும் நன்றாக விளையாடவில்லையெனில் நான் ஏமாற்றத்தை சந்திப்பேன். பென் டக்கெட் என்ன சொன்னாலும் சாம்பியன்ஸ் ட்ராபிக்கு முன்பாக சந்தித்த இந்த தோல்வி இங்கிலாந்து அணியின் தன்னம்பிக்கையை வெகுவாக குறைத்திருக்கும்”

- Advertisement -

காமெடி பண்றிங்களா:

“கடந்த வருடமும் அவர் இதே போன்ற ஒரு கருத்தை தெரிவித்திருந்தார். குறிப்பாக இங்கிலாந்தின் பஸ் பால் ஸ்டைலை பார்த்து தான் ஜெய்ஸ்வால் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடுவதாக அவர் கூறினார். அந்த வகையில் பென் டக்கெட் பற்றியும் அவருடைய நகைச்சுவை தன்மை பற்றியும் எனக்குத் தெரியும்”

இதையும் படிங்க: 3இல் 0 தகுதி.. இந்தியாவை குறை சொல்லி காமெடி பண்ணாம.. அதை புரிஞ்சிகிட்டு வாங்க.. ஸ்டோக்ஸை விளாசிய அஸ்வின்

“ஆனால் இது நகைச்சுவை அல்ல. நீங்கள் உங்களுடைய தோல்வியை நகைச்சுவைக்குப் பின் ஒழித்து வைக்கிறீர்கள். 2023 உலகக்கோப்பையும் உங்களுக்கு மோசமாகவே சென்றது நீங்கள் 2 – 3 மாதங்கள் மட்டுமல்ல நான்கு வருடங்களாகவே சுமாரான ஃபார்மில் இருக்கிறீர்கள். இத்தனைக்கும் நல்ல திறமை இருந்தும் அதற்குத் தகுந்தார் போல் நீங்கள் விளையாடவில்லை” என்று பதிலடி கொடுத்துள்ளார்.

- Advertisement -