இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரை 3 – 0 (3) என்ற கணக்கில் இந்தியா வென்றது. அதனால் வெற்றியுடன் சாம்பியன்ஸ் டிராபிக்கு இந்தியா விளையாடுவதற்கு சென்றுள்ளது. மறுபுறம் இங்கிலாந்துக்கு எதிராக ஒயிட்வாஸ் தோல்வியை சந்தித்தாலும் பிரச்சனையில்லை என்று இங்கிலாந்து வீரர் பென் டக்கெட் கூறினார். ஏனெனில் சாம்பியன்ஸ் டிராபி ஃபைனலில் இந்தியாவையே தோற்கடிக்கும் திறமை தங்களிடம் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
கடைசியில் அவர் கேட்டது போலவே இங்கிலாந்துக்கு ஒயிட்வாஸ் தோல்வியை இந்தியா பரிசாக கொடுத்து அனுப்பியது. இந்நிலையில் ஒருநாள் கிரிக்கெட்டில் கடந்த 4 வருடங்களாகவே இங்கிலாந்து சுமாராக விளையாடுவதாக ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். ஆனால் அதையெல்லாம் இப்படி நகைச்சுவை செய்து இங்கிலாந்து மறைப்பதாகவும் அஸ்வின் சாடியுள்ளார்.
அஸ்வின் பதிலடி:
மேலும் சமீபத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல் சிஸ்டம் பற்றி தமக்கு ஒன்றும் புரியவில்லை என இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்திருந்தார். ஆனால் அதே இங்கிலாந்து தங்களது சொந்த மண்ணில் நடைபெற்ற 2021, 2023, 2025* டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு ஒருமுறை கூட தகுதி பெற்றதில்லை. எனவே இப்படி நகைச்சுவை செய்யாமல் புள்ளிப்பட்டியலை புரிந்து கொண்டு வாருங்கள் என்றும் அவருக்கு அஸ்வின் பதிலடி கொடுத்துள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை அவர்கள் குறைவாக எடுத்துக் கொண்டார்கள். பென் டக்கெட் மற்றும் அவருடைய நகைச்சுவை உணர்வு பற்றி எனக்குத் தெரியும். ஆனால் இது நகைச்சுவை அல்ல. நீங்கள் உங்களுடைய தோல்வியை அதற்குப்பின் ஒழித்து வைக்கும் செயலாகும். டெஸ்ட் கிரிக்கெட்டிலும் சில நாட்களுக்கு முன்பாக சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல் சிஸ்டம் பற்றி தமக்கு புரியவில்லை என்று பென் ஸ்டோக்ஸ் சொன்னதைப் படித்தேன்”
இதெல்லாம் காமெடியா:
“அவருக்கான என்னுடைய ஒரே ஆலோசனை என்னவெனில் உங்களுக்கு புள்ளிப்பட்டியல் முறை புரியவில்லையெனில் முதலில் சென்று அதைப் புரிந்து கொண்டு வாருங்கள். அது நகைச்சுவை கிடையாது. ஒவ்வொரு முறையும் நீங்கள் தோற்கும் போது இப்படி சாக்கு எடுத்து வருகிறீர்கள். ஒருவேளை இங்கிலாந்து போல இந்தியாவும் தங்களுடைய கிரிக்கெட்டை விளையாடினால் இங்கே ஒரே கேப்டன் பயிற்சியாளர் தொடர முடியும் என்று நினைக்கிறீர்களா”
இதையும் படிங்க: ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி வரலாறு: சச்சின், ஜடேஜா.. அதிக விக்கெட்ஸ் எடுத்த டாப் 5 இந்திய பவுலர்களின் பட்டியல்
“இந்தியாவுக்கு வந்த பின் இங்குள்ள பிட்ச் மற்றும் ஹோட்டலில் இங்கே கொடுக்கப்படும் உணவுகளைப் பற்றி இங்கிலாந்து பேசுகிறார்கள். இந்தியாவில் உள்ள அனைத்து விஷயங்கள் பற்றியும் இங்கிலாந்து கதைக்கிறார்கள். ஆனால் கிரிக்கெட்டை மட்டும் பற்றி பேசுவதில்லை” என்று கூறினார். இதைத் தொடர்ந்து சாம்பியன்ஸ் டிராபி பிப்ரவரி 19ஆம் தேதி துவங்குகிறது.



