மச்சான் வன்மராஜ் வந்துட்டான்.. சிஎஸ்கே பிளானை லீக் செய்ததை விமர்சித்த ரசிகர்களுக்கு அஸ்வின் பதில்

- Advertisement -

ஐபிஎல் 2026 டி20 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் நேற்று முன்தினம் அபுதாபியில் நடைபெற்ற முடிந்தது. அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிரசாந்த் வீர், கார்த்திக் சர்மா ஆகியோரை தலா 14.20 கோடிக்கு வாங்கியது அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. ஏனெனில் 20 வயதைத் தாண்டாத அவர்கள் இதற்கு முன் ஐபிஎல் மற்றும் சர்வதேச அரங்கில் விளையாடிய அனுபவத்தைக் கொண்டிருக்கவில்லை.

இருப்பினும் 44 வயதாகும் தோனி இந்த வருடத்துடன் ஓய்வு பெற வாய்ப்புள்ளது. மேலும் கடந்த சீசனில் மோசமாக விளையாடிய சிஎஸ்கே முதல் முறையாக புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்து வெளியேறியது. எனவே ருதுராஜ் தலைமையில் கம்பேக் கொடுத்து வருங்கால அணியை வளமாக கட்டமைப்பதற்காக சிஎஸ்கே தங்களுடைய அணியை இளமையாக மாற்றியுள்ளது என்றே சொல்லலாம்.

- Advertisement -

கசிய விட்ட அஸ்வின்:

முன்னதாக ஐபிஎல் 2026 ஏலத்தில் வாங்கப் போகும் வீரர்கள் பற்றிய அனுமான கருத்துக்களை ரவிச்சந்திரன் அஸ்வின் தன்னுடைய யூடியூப் பக்கத்தில் வீடியோக்களாக வெளியிட்டார். அத்துடன் ட்விட்டர் பக்கத்தில் 2 புகைப்படங்களை வைத்து சிஎஸ்கே வாங்கப்போகும் வீரர்களையும் அவர் மறைமுகமாக பதிவிட்டார். அது மட்டுமின்றி கார்த்திக் சர்மா சேப்பாக்கத்திற்கு சரியாக பொருந்துவார், எல்லோ (பிரசாந்த்) வீர் ஏலத்தில் அசத்துவார் என்றும் அஸ்வின் பதிவிட்டிருந்தார்.

கடைசியில் அவர் பதிவிட்ட பதிவுகளில் இருந்த வீரர்களை சிஎஸ்கே வாங்கியது. குறிப்பாக மேத்தியூ ஷார்ட், பிரசாந்த் வீர், கார்த்திக் சர்மா ஆகியோரை சிஎஸ்கே வாங்கியது. இருப்பினும் அதைப் பார்த்த சில சிஎஸ்கே ரசிகர்கள் ரவிச்சந்திரன் அஸ்வின் தங்களுடைய அணியின் திட்டங்களை கசிய விட்டதாக ட்விட்டரில் அதிருப்தி தெரிவித்துள்ளார்கள்.

- Advertisement -

அஸ்வின் பதில்:

குறிப்பாக பிரசாந்த் வீர், கார்த்திக் சர்மா ஆகியோரை சிஎஸ்கே வாங்க முயற்சிக்கும் போது ஹைதராபாத் அணி வேண்டுமென்றே ஏலம் கேட்டு விலையை அதிகரித்து விட்டது. அதற்கு ரவிச்சந்திரன் அஸ்வின் முன்கூட்டியே கசிய விட்ட தகவல்கள் தான் காரணம் என்று ரசிகர்கள் விமர்சிக்கிறார்கள். இந்நிலையில் அவர்களுக்கு ரவிச்சந்திரன் அஸ்வின் ஜாலியாக கொடுத்துள்ள பதில் பின்வருமாறு.

இதையும் படிங்க: அதிரடியாக ஆடி 2026 டி20 உ.கோ ஜெய்க்கனும்ன்னா கில்லை கழற்றி விட்டு அவரை ஆடவைங்க.. உத்தப்பா அட்வைஸ்

“ஹைதராபாத் அணி முத்தையா முரளிதரன், டேனியல் வெட்டோரி, ஆய்வாளர்கள், சாரணர்கள் ஆகியோரை தங்களுடைய மேஜையில் கொண்டிருந்தது. அதையும் தாண்டி என்னுடைய ட்வீட்டில் அவர்கள் நம்பிக்கைக் காட்டியுள்ளனர்” என்று கூறியுள்ளார். அதாவது முரளிதரன், வெட்டோரி போன்ற ஜாம்பவான்களை வைத்துக்கொண்டு ஹைதராபாத் அணி ஏன் தம்முடைய ட்வீட்டை பார்த்து வீரர்களை வாங்கப் போகிறது? என்று அஸ்வின் பதிலளித்துள்ளார். அதே போல மற்றொரு ரசிகருக்கு. “மச்சான் வன்மராஜ் ஸ்டேஷன்குள்ள வந்துட்டான்” என்று கலகலப்பாக பதிலடி கொடுத்துள்ளார்.

Advertisement