சிஎஸ்கே’வை விட்டு போய்டுங்க.. 2 கோப்பை நன்றி மறந்த ரசிகருக்கு அழுகையுடன் அஸ்வின் பதிலடி

R Ashwin
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் வெளியேறியது. அத்துடன் வரலாற்றிலேயே முதல் முறையாக புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்து சென்னை மோசமான சாதனை படைத்தது. அந்த அணியின் இந்த தோல்விகளுக்கு ரவிச்சந்திரன் அஸ்வின் ஒரு காரணமாக பார்க்கப்படுகிறார்.

2009 – 2015 வரை சிஎஸ்கே அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக செயல்பட்ட அவர் 2010, 2011 ஆகிய அடுத்தடுத்த கோப்பைகளை தோனி தலைமையில் வெல்ல முக்கிய பங்காற்றினர். அதன் பின் பல்வேறு அணிகளில் விளையாடிய அஸ்வின் இம்முறை 9.75 கோடிக்கு சிஎஸ்கே அணிக்காக விளையாட வாங்கப்பட்டார். சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற அவர் 10 வருடங்கள் கழித்து சிஎஸ்கே அணிக்காக மிகச்சிறப்பாக பவுலிங் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

வெளியே போங்க:

ஆனால் அதற்கு நேர்மாறாக பவுலிங் செய்த அஸ்வின் பிளேயிங் லெவனில் நிரந்தரமாக இடம் பிடிக்கவே தடுமாறினார். இந்நிலையில் இன்று தம்முடைய யூடியூப் பக்கத்தில் அஸ்வின் ஐபிஎல் பற்றி நேரலை வீடியோவில் விவாதித்தார். அப்போது ஒரு சிஎஸ்கே ரசிகர். “ஹாய் அன்பான அஸ்வின். நிறைய அன்புடன் சொல்கிறேன் என்னுடைய அன்பான சிஎஸ்கே குடும்பத்தை விட்டு சென்று விடுங்கள்” என்று கமெண்ட் செய்தார்.

அதை கவனித்த அஸ்வின் 2010, 2011 கோப்பைகளை சிஎஸ்கே வெல்ல உதவியதை மறந்து பேசிய அந்த ரசிகருக்கு வேதனையுடன் கொடுத்த பதில் பின்வருமாறு. “இவருடைய அன்பான ஐபிஎல் அணிக்கு ஒரு விஷயத்தை என்னால் தொடர்படுத்த முடியும். ஒரு விஷயத்தை சொல்லும் போது உங்களுடைய நன்மைக்காக சொல்கிறீர்களா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்”

- Advertisement -

அஸ்வின் வேதனை:

“நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பதை நான் புரிந்து கொள்கிறேன். நானும் சிஎஸ்கே மீது அதே அன்பு மற்றும் நலனைக் கொண்டிருக்கிறேன். இந்த வருடத்தை வீணடிக்க வேண்டும் என்று நான் செல்லவில்லை. எனது கையில் நீங்கள் பேட், பந்தை கொடுத்தால் அதை வைத்து விளையாட முடியும் என்பதே என்னுடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது. கடினமாக உழைக்கும் நான் சில விஷயங்களில் முன்னேற வேண்டும் என்பதை அறிவேன்”

இதையும் படிங்க: சச்சினோட கம்பேர் பண்ணாதீங்க.. நம்ப முடியாத சூர்யவன்சி இதை செய்ய முடியுமா தெரியல? ஸ்டீவ் வாக் பாராட்டு

“குறிப்பாக பவர்பிளேவில் அதிக ரன்கள் கொடுத்தேன். எனவே அடுத்த வருடம் அங்கே அசத்துவதற்கு நிறைய ஆப்சன்களை உருவாக்க வேண்டும். உண்மையில் உங்கள் அனைவரை விட சிஎஸ்கே மீது எனக்கு அதிக அன்பும் அக்கறையும் இருக்கிறது. 2009, 2010 முதல் சென்னைக்கான 7 வருடங்கள் விளையாடிய நான் பிளே ஆஃப் சென்று கோப்பைகளையும் வென்றுள்ளேன். அப்படிப்பட்ட ஒரு சாம்பியன் அணி இவ்வாறு தடுமாறியதைப் பார்த்து நானும் சோகமடைந்துள்ளேன். அதனாலேயே மூலையில் உட்கார்ந்து அழுது கொண்டிருக்கும் நான் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற இலக்கைக் கொண்டுள்ளேன்” எனக் கூறினார்.

Advertisement