இந்த 2 பசங்க வருங்காலத்தில் வெளிநாட்டின் இந்தியாவின் தூண்களாக இருப்பாங்க.. அஸ்வின் நம்பிக்கை

R Ashwin 7
- Advertisement -

வங்கதேசத்துக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரை 2 – 0 (2) என்ற கணக்கில் இந்திய கிரிக்கெட் அணி வென்றது. குறிப்பாக கான்பூரில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் 2 நாட்கள் ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது. அதனால் டிராவில் முடியும் என்று எதிர்பார்க்கப்பட்ட அந்தப் போட்டியில் கடைசி 2 நாட்களில் வங்கதேசத்தை துவம்சம் செய்த இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

அதனால் பாகிஸ்தானை போல வீழ்த்துவோம் என்று சவால் விடுத்த வங்கதேசத்தை ஒயிட்வாஷ் செய்து கோப்பையை வென்ற இந்தியா தங்களை சொந்த மண்ணில் வலுவான அணி என்பதை மீண்டும் நிரூபித்தது. இந்நிலையில் ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் வருங்காலங்களில் வெளிநாட்டு மண்ணில் இந்திய பேட்டிங் துறையின் தூண்களாக செயல்பட்டு வெற்றிகளை பெற்றுக் கொடுப்பார்கள் என்று ரவிச்சந்திரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

வருங்கால நட்சத்திரங்கள்:

இது பற்றி போட்டியின் முடிவில் ஜியோ சினிமா சேனலில் அவர் பேசியது பின்வருமாறு. “ஜெயஸ்வால் சுதந்திரமாக விளையாடக்கூடிய ஸ்பெஷல் திறமையானவர் என்று நான் நினைக்கிறேன். சுப்மன் கில் போலவே அவரும் தன்னுடைய சர்வதேச கேரியரை சமீபத்தில் துவங்கினார். இருவருமே தங்களுடைய ஆரம்பகட்ட நாட்களில் இருக்கிறார்கள். அல்லது டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆரம்பகட்ட வருடங்களில் விளையாடுகின்றனர் என்று சொல்லலாம்”

“அவர்கள் அணியின் வருங்கால தூண்களாகவும் வெளிநாட்டில் அசத்தும் நட்சத்திரங்களாகவும் இருப்பதை நாம் விரைவில் பார்ப்போம். அவர்களின் அற்புதமான பயணத்தில் அனுபவத்தால் மேம்பட்டு விளையாடுவார்கள். அவர்கள் இருவரும் ஸ்பெஷலானவர்கள் என்பதை நாம் அறிவோம். அவர்கள் மேலும் மேலும் புதிய அனுபவத்தை சந்திக்கும் போது இன்னும் சிறப்பாக என்ன வேலை செய்ய என்பதைப் பற்றி அடையாளம் காண முடியும்”

- Advertisement -

அஸ்வின் நம்பிக்கை:

“என்னிடம் கேட்டால் அதற்கான மூலப் பொருட்கள் அவர்களிடம் இருக்கிறது என்று சொல்வேன். இருவருமே உயர்தர வீரர்கள் என்பது அனைவருக்கும் தெளிவாகத் தெரிகிறது” என்று கூறினார். அவர் கூறுவது போல சுப்மன் கில் 2021 காபா டெஸ்ட் போட்டியில் 91 ரன்கள் அடித்து ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா மறக்க முடியாத வெற்றியை பதிவு செய்ய உதவினார்.

இதையும் படிங்க: சென்னையில் ஆஸிக்கு எதிராக 58 பந்தில் 100.. 13 வயது இந்திய வீரர் சச்சின், யுவியை முந்தி உலக சாதனை

அத்துடன் சமீபத்திய வருடங்களில் 3 வகையான கிரிக்கெட்டிலும் அவர் ஓரளவு நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தினார். அதே போல 2023ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் அறிமுகமான ஜெய்ஸ்வால் டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடி வருகிறார். குறிப்பாக இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் ஜாம்பவான் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு எதிராக ஹார்ட்ரிக் சிக்சர்களை அடித்த ஜெய்ஸ்வால் 712 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement