- Advertisement -
ஐ.பி.எல்

சிஎஸ்கே அணியின் புதிய ஓப்பனிங் ஜோடியாக இவங்க நல்லாருப்பாங்க.. டாப் 4க்கு 5 பேர் போட்டி.. அஸ்வின் பேட்டி

ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கம்பேக் கொடுப்பதற்கு தயாராகி வருகிறது. கடந்த வருடம் மோசமாக விளையாடிய அந்த அணி வரலாற்றிலேயே முதல் முறையாக புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்து வெளியேறியது. அதனால் சொதப்பலாக விளையாடிய வீரர்களை கழற்றி விட்ட சிஎஸ்கே அணி சஞ்சு சாம்சனை 18 கோடிக்கு டிரேடிங் முறையில் ராஜஸ்தான் அணியிடமிருந்து வாங்கியுள்ளது.

அதற்கு பதிலாக ரவீந்திர ஜடேஜா, ஷாம் கரண் ஆகியோரை ராஜஸ்தானுக்கு கொடுத்த சிஎஸ்கே அணி எஞ்சிய வீரர்களை ஏலத்தில் வாங்க உள்ளது. இந்நிலையில் சஞ்சு சாம்சன் இந்திய அணிக்காக ஓப்பனிங்கில் அபாரமாக விளையாடி 3 சதங்களை அடித்துள்ளார். எனவே அவர் சிஎஸ்கே அணியின் புதிய ஓப்பனிங் ஜோடியில் களமிறக்க வேண்டும் என்று ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

புதிய ஓப்பனிங் ஜோடி:

அதே போல 2023இல் ஓப்பனிங்கில் அதிக ரன்கள் குவித்த ருதுராஜ் கெய்க்வாட் ஆரஞ்சு தொப்பி வென்று சிஎஸ்கே கோப்பை வெல்ல உதவினார். இருப்பினும் கேப்டனாக பொறுப்பேற்ற பின் அணியின் நலனுக்காக அவர் 3வது இடத்தில் களமிறங்கி வருகிறார். எனவே மீண்டும் அவர் ஓப்பனிங்கில் விளையாடுவது சிஎஸ்கே அணிக்கு வெற்றிகரமான துவக்கத்தைக் கொடுக்கும் என்று அஸ்வின் கூறியுள்ளார்.

அத்துடன் கடந்த சீசனில் சதமடித்து அசத்திய ஆயுஷ் மாத்ரே, உர்வில் பட்டேல், தேவால்ட் ப்ரேவிஸ் ஆகியோரும் சிஎஸ்கே அணிக்காக டாப் 4 இடங்களில் விளையாடும் போட்டியில் இருப்பதாக அஸ்வின் தெரிவித்துள்ளார். அவர்களில் யாரைத் தேர்ந்தெடுப்பது என்பது சிஎஸ்கே அணிக்கு சவாலாக இருக்கும் எனக் கூறும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “ருதுராஜ் – சாம்சன் ஆகியோரிடம் பரம்பரை இருக்கிறது”

- Advertisement -

அஸ்வின் கருத்து:

“பரம்பரை என்றால் குறிப்பிட்ட காலம் தரமான ரன்கள் அடித்து ஓப்பனிங் இடத்தை தக்க வைத்ததைப் பற்றியதாகும். அதை நாம் மறக்கக்கூடாது. என்னைப் பொறுத்த வரை அவர்கள் இருவரும் ஓப்பனிங்கில் சென்று அடித்து நொறுக்குவதைப் பார்க்க விரும்புகிறேன். அவர்கள் இருவருமே வித்தியாசமான பலத்தைக் கொண்டுள்ளார்கள். ஒருவர் பந்தைக் கவனித்து அடிப்பவர். மற்றொருவர் கடினமாக அடிக்கக்கூடியவர்”

இதையும் படிங்க: ஐபிஎல் தொடரில் விஸ்வாசியாக திடீர் ஓய்வை அறிவித்த ரசல்.. கொல்கத்தா அணியில் புதிய பொறுப்பு

“இருப்பினும் மகாராஷ்டிராவை போல சிஎஸ்கே அணியிலும் ருதுராஜ் 3வது இடத்தில் விளையாட விரும்புவதாகத் தெரிகிறது. அதனால் உர்வில் பட்டேல் எங்கே விளையாடுவார் என்ற கேள்வி எழுகிறது. ஒருவேளை அவர் 4வது இடத்தில் களமிறங்கினால் டாப் 4 இடங்களும் வலது கையாக மாறிவிடும். இங்கே ரன்கள் அடித்த ஆயுஷ் மாத்ரேவும் காத்திருக்கிறார். எனவே சிஎஸ்கே அணி எப்படி தங்களுடைய டாப் 4 இடத்தைப் பொருத்துகிறார்கள் என்பதைப் பார்ப்பது தந்திரமான கேள்வியாக இருக்கும்” என்று கூறினார்.

- Advertisement -