ஐபிஎல் 2026 டி20 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் வெறும் 2.75 கோடிகள் கையிருப்பு தொகையுடன் களமிறங்கியது. அதனால் கேமரூன் கிரீனை ஆரம்பத்திலேயே விலைக்கு கேட்ட மும்பை 2 கோடிக்கு மேலே ஏலம் கேட்க முடியவில்லை. அப்படி மும்பை குறைந்த தொகையை வைத்துக்கொண்டு கேமரூன் கிரீன் போன்ற பெரிய தொகைக்கு செல்லக்கூடிய வீரரை வாங்க நினைத்தது பலரையும் புன்னகைக்க வைத்தது.
அத்துடன் நட்சத்திர வெளிநாட்டு வீரர்கள் யாரையும் மும்பை அணியால் வாங்க முடியாது என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்த சூழ்நிலையில் தென்னாப்பிரிக்காவை சேர்ந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் குவிண்டன் டீ காக் 1 கோடி அடிப்படை விலைக்கு ஏலம் வந்தார். இதற்கு முன் தங்களுக்காக விளையாடிய அவரை மீண்டும் வாங்குவதற்காக மும்பை அணி ஏலம் கேட்டது.
தட்டி தூக்கிய மும்பை:
அதிர்ஷ்டவசமாக அதற்கு வேறு எந்த அணியும் போட்டிக்கு வராததால் அவரை வெறும் 1 கோடிக்கு மும்பை வாங்கியது அந்த அணி ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்தது. ஏனெனில் கடந்த காலங்களில் ரோஹித் சர்மாவுடன் களமிறங்கிய டீ காக் அதிரடியாக விளையாடி மும்பையின் வெற்றிகளில் பங்காற்றினார். குறிப்பாக 2019, 2020 ஆகிய அடுத்தடுத்த கோப்பைகளை மும்பை வெல்வதற்கு வரும் உதவிகரமாக இருந்தார்.
அதன் பின் மெகா ஏலத்தில் தவிற விட்ட அவரை மும்பை தற்போது மீண்டும் வாங்கியுள்ளது. இந்நிலையில் டீ காக்’கை வாங்கியுள்ள மும்பை 2019, 2020 காலங்களில் இருந்த தங்களுடைய சாம்பியன் அணியை கட்டமைத்துள்ளதாக ரவிச்சந்திரன் அஸ்வின் பாராட்டியுள்ளார். இது பற்றி அஸ்வின் பேசியது பின்வருமாறு. “குவிண்டன் டீ காக்’கை வாங்கியது நல்ல நகர்வு என்று நினைக்கிறேன்”
அஸ்வின் பாராட்டு:
“மற்ற அணிகள் தூங்கிக் கொண்டிருந்த போது மும்பை உற்று நோக்கியது. ரியன் ரிக்கல்டன் தங்களுடைய நல்ல ஓப்பனிங் ஜோடியாக இருப்பார் என்பதில் மும்பை உறுதியாக இல்லை. தற்போது அவர்கள் 2020 ஐபிஎல் சாம்பியன்ஷிப் வென்ற அணியை மீண்டும் உருவாக்க முயற்சிக்கிறார்கள். அந்த அணியில் தற்போது இசான் கிசான் மட்டுமே இல்லை”
இதையும் படிங்க: சேப்பாக்கத்தில் ஸ்வீப்.. இதுக்காக தான் பொருத்தமான சர்பராஸை சிஎஸ்கே வாங்கிருக்கு.. அஸ்வின் பேட்டி
“வெறும் 2.75 மட்டுமே வைத்திருந்த மும்பை ஏலத்திற்கு முன்பே நிறைய நல்ல வீரர்களை வாங்கியது. அதனால் ஏலத்திற்கு வருவதற்கு முன்பே அவர்கள் கோப்பையை வெல்லும் அளவுக்கு தரமான அணியை அமைத்தனர். தற்போது ஏலம் முடிந்த பின் அவர்களுடைய அணி இன்னும் வலுவாக இருக்கிறது” என்று கூறினார். இது மட்டுமின்றி அதர்வா அன்கோலேக்கர், முகமது இஷார், டேனிஷ் மேல்வர் ஆகிய இளம் வீரர்களையும் மும்பை குறைந்த விலைக்கு வாங்கியது குறிப்பிடத்தக்கது.



